சினிமா செய்திகள்

'ஒத்த செருப்பு' திரைப்படத்தை இயக்கியதற்காக இயக்குநர் பார்த்திபனுக்கு சிறந்த இயக்குநர் விருது + "||" + Best Director Award for Director Parthiban for directing 'oththa seruppu'

'ஒத்த செருப்பு' திரைப்படத்தை இயக்கியதற்காக இயக்குநர் பார்த்திபனுக்கு சிறந்த இயக்குநர் விருது

'ஒத்த செருப்பு' திரைப்படத்தை இயக்கியதற்காக இயக்குநர் பார்த்திபனுக்கு சிறந்த இயக்குநர் விருது
2020ம் ஆண்டுக்கான சிறந்த திரைப்பட இயக்குநருக்கான விருது புதுச்சேரி அரசு சார்பில் நடிகர் பார்த்திபனுக்கு வழங்கப்பட்டது.
புதுச்சேரி, 

ஒத்த செருப்பு சைஸ் 7’ என்ற படத்தை, கடந்த ஆண்டு பார்த்திபன் இயக்கி, தயாரித்து இருந்தார். இந்த படத்தில் பார்த்திபன் மட்டும் ஒற்றை ஆளாய் நடித்தது, நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதனால் இந்த படத்திற்கு பல்வேறு விருதுகள் கிடைத்தது.

இந்நிலையில் புதுச்சேரி அரசு சார்பில் 2020 ஆம் ஆண்டிற்கான சிறந்த திரைப்பட இயக்குநருக்கான விருதை 'ஒத்த செருப்பு' திரைப்படத்தை இயக்கியதற்காக இயக்குநர் பார்த்திபனுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி செய்தி மற்றும் விளம்பரத்துறை நடத்திய இந்திய திரைப்பட விழாவில் சிறந்த படத்திற்கான விருது ’ஒத்த செருப்பு’ படத்திற்கு கிடைத்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. 2020ல் அதிகம் டுவிட் செய்யப்பட்டுள்ள திரைப்படம்: முதல் இடத்தில் “மாஸ்டர்”, 3வது இடத்தில் “வலிமை”
2020ம் ஆண்டில் டுவிட்டரில் அதிகம் டுவீட் செய்யப்பட்ட தென்னிந்திய திரைப்படங்களில் விஜய் நடித்துள்ள “மாஸ்டர்” திரைப்படம் முதலிடத்தை பிடித்துள்ளது.