சினிமா செய்திகள்

மே மாதம் அஜித்தின் வலிமை: விஜய்யின் 65-வது படம் தீபாவளிக்கு ரிலீஸ் + "||" + Ajith's strength in May: Vijay's 65th film released for Diwali

மே மாதம் அஜித்தின் வலிமை: விஜய்யின் 65-வது படம் தீபாவளிக்கு ரிலீஸ்

மே மாதம் அஜித்தின் வலிமை: விஜய்யின் 65-வது படம் தீபாவளிக்கு ரிலீஸ்
"வலிமை" படத்தை அஜித்குமாரின் பிறந்த நாளான மே 1-ந்தேதி ரிலீஸ் செய்ய ஆலோசிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. விஜய்யின் 65-வது படம் அடுத்த வருடம் தீபாவளி பண்டிகையில் திரைக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளனர்.
விஜய்யின் மாஸ்டர் படம் பொங்கலுக்கு வெளியாகிறது. இந்த படத்துக்கு பிறகு விஜய் நடிக்க உள்ள அவரது 65-வது படத்தை நெல்சன் இயக்குவதாக அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளனர். இவர் நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தை இயக்கி பிரபலமானவர். விஜய்யின் புதிய படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இதில் விஜய் ஜோடியாக நடிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. கதாநாயகி மற்றும் இதர நடிகர், நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கிறது. படப்பிடிப்பை மார்ச் மாதம் தொடங்கி 3 கட்டமாக நடத்தி முடிக்க திட்டமிட்டு உள்ளனர். அடுத்த வருடம் தீபாவளி பண்டிகையில் படத்தை திரைக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளனர். 

அஜித்குமாரின் வலிமை படப்பிடிப்பு ஐதராபாத்தில் கொரோனாவுக்கு முன்பே தொடங்கியது. ஊரடங்கு தளர்வில் மீண்டும் படப்பிடிப்பை நடத்தினர். அஜித்தின் பைக் சாகச காட்சியை படமாக்கியபோது அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. தற்போது படக்குழுவினர் சென்னை திரும்பி உள்ளனர். 20 சதவீத படப்பிடிப்பு மட்டுமே பாக்கி உள்ளது. விரைவில் ஐதராபாத்தில் மீண்டும் படப்பிடிப்பு நடக்க உள்ளது. வலிமை அஜித்குமாரின் பிறந்த நாளான மே 1-ந்தேதி ரிலீஸ் செய்ய ஆலோசிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.