சினிமா செய்திகள்

மாதவனின் ‘மாறா’ ஓ.டி.டி.யில் ரிலீஸ் + "||" + Madhavan constant Release on OTT

மாதவனின் ‘மாறா’ ஓ.டி.டி.யில் ரிலீஸ்

மாதவனின் ‘மாறா’ ஓ.டி.டி.யில் ரிலீஸ்
தியேட்டர்களுக்கு பதிலாக ஓ.டி.டி. தளத்தில் நேரடியாக ரிலீஸ் செய்யப்பட்டன. தற்போது ஊரடங்கு தளர்வில் தியேட்டர்கள் திறக்கப்பட்டு உள்ளன.
கொரோனா திரையுலகை 8 மாதங்களாக முடக்கி போட்டது. இதனால் சூர்யாவின் சூரரை போற்று, ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேசின் பென்குயின், வரலட்சுமி சரத்குமாரின் டேனி, விஜய்சேதுபதி நடித்துள்ள க.பெ.ரணசிங்கம், அனுஷ்காவின் நிசப்தம் உள்ளிட்ட படங்கள் தியேட்டர்களுக்கு பதிலாக ஓ.டி.டி. தளத்தில் நேரடியாக ரிலீஸ் செய்யப்பட்டன. தற்போது ஊரடங்கு தளர்வில் தியேட்டர்கள் திறக்கப்பட்டு உள்ளன. ஆனாலும் படம் பார்க்க திரையரங்குகளுக்கு வருவோர் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இதனால் பல தியேட்டர்கள் மீண்டும் மூடப்பட்டு உள்ளன. இதனால் புதிய படங்கள் மீண்டும் ஓ.டி.டி. பக்கம் திரும்பி உள்ளன. திலீப் குமார் இயக்கத்தில் மாதவன், ஸ்ரத்தா கபூர் ஜோடியாக நடித்துள்ள மாறா படம் அடுத்த மாதம் (ஜனவரி) முதல் வாரத்தில் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகும் என்று அறிவித்து உள்ளனர். மலையாளத்தில் துல்கர் சல்மான், பார்வதி மேனன், அபர்ணா கோபிநாத், நெடுமுடிவேணு ஆகியோர் நடித்து கேரளாவில் வெளியாகி வெற்றி பெற்ற சார்லி படத்தின் தமிழ் ரீமேக்காக மாறா படம் தயாராகி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. யோகி பாபு படம் ஓ.டி.டி.யில் ரிலீஸ்
தியேட்டர்களுக்கு பதிலாக புதிய படங்களை திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பை மீறி ஓ.டி.டி.யில் வெளியிடும் போக்கு நீடிக்கிறது.