சினிமா செய்திகள்

படப்பிடிப்புக்கு கணவருடன் வந்த காஜல் அகர்வாலை வரவேற்ற சிரஞ்சீவி + "||" + For shooting Kajal Agarwal who came with her husband Welcome Chiranjeevi

படப்பிடிப்புக்கு கணவருடன் வந்த காஜல் அகர்வாலை வரவேற்ற சிரஞ்சீவி

படப்பிடிப்புக்கு கணவருடன் வந்த காஜல் அகர்வாலை வரவேற்ற சிரஞ்சீவி
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் காஜல் அகர்வால் சமீபத்தில் தொழில் அதிபர் கவுதம் கிச்சிலு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
தேனிலவுக்கு மாலத்தீவு சென்றும் திரும்பினார். தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தயாராகி உள்ளார். அவர் கைவசம் இப்போது தமிழில் 3 படங்களும், தெலுங்கில் 2 படங்களும், இந்தியில் ஒரு படமும் உள்ளன. ஏற்கனவே தமிழில் பாரிஸ் பாரிஸ் படத்தில் நடித்து முடித்து விட்டார். கமல்ஹாசன் ஜோடியாக நடிக்கும் இந்தியன் 2 படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். இந்தியில் சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கி உள்ளது. இந்த படத்தில் நடிக்க படப்பிடிப்பு தளத்துக்கு கணவருடன் அவர் வந்தார். அப்போது காஜல் அகர்வால், கவுதம் கிச்சிலு தம்பதிக்கு நடிகர் சிரஞ்சீவி மலர் கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்து வரவேற்றார். பின்னர் படப்பிடிப்பு அரங்கில் காஜல் அகர்வால் படக்குழுவினர் முன்னிலையில் கேக் வெட்டி திருமணத்தை கொண்டாடினார். இந்த புகைப்படங்கள் வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. 'அண்ணாத்த' படப்பிடிப்புக்கு மீண்டும் தயாராகும் ரஜினி
ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படப்பிடிப்பை கொரோனா பரவலுக்கு முன்பே 40 சதவீதம் முடித்து விட்டனர். ஊரடங்கை தளர்த்தியதும் கடந்த டிசம்பர் மாதம் ஐதராபாத்தில் படப்பிடிப்பை ஆரம்பித்தபோது படக்குழுவினர் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.