சினிமா செய்திகள்

ராவணன் பற்றி சர்ச்சை கருத்து: சயீப் அலிகான் மீது வழக்கு + "||" + Controversial comment about Ravana The case against Saif Ali Khan

ராவணன் பற்றி சர்ச்சை கருத்து: சயீப் அலிகான் மீது வழக்கு

ராவணன் பற்றி சர்ச்சை கருத்து: சயீப் அலிகான் மீது வழக்கு
ராமாயண கதையை மையமாக வைத்து இந்த படம் தயாராவதாகவும், ராமர் வேடத்தில் பிரபாசும், ராவணனாக சயீப் அலிகானும் நடிக்கின்றனர் என்றும் அறிவித்து உள்ளனர்.
பாகுபலியில் பிரபலமான பிரபாஸ் அடுத்து ஆதிபுருஷ் என்ற படத்தில் நடிக்கிறார். ராமாயண கதையை மையமாக வைத்து இந்த படம் தயாராவதாகவும், ராமர் வேடத்தில் பிரபாசும், ராவணனாக சயீப் அலிகானும் நடிக்கின்றனர் என்றும் அறிவித்து உள்ளனர். 3டி தொழில் நுட்பத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் தயாராகிறது. சயீப் அலிகான் சமீபத்தில் அளித்த பேட்டியில் ராவணன் சீதையை கடத்தியதில் உள்ள நியாயத்தை எனது கதாபாத்திரம் பிரதிபலிக்கும் என்றார். இது சர்ச்சையாகி சயீப் அலிகானுக்கு எதிர்ப்பு கிளம்பியது. சீதையை ராவணன் கடத்தியது தவறு. அதில் நியாயம் எதுவும் கிடையாது என்று பா.ஜனதா கட்சியினரும், இந்து அமைப்புகளும் கண்டித்தன. இதையடுத்து சயீப் அலிகான் மன்னிப்பு கேட்டார்.

இந்த நிலையில் ஹிமன்சு ஸ்ரீவத்சவா என்ற வக்கீல் உத்தரபிரதேசத்தில் உள்ள ஜான்பூர் கோர்ட்டில் சயீப் அலிகான் கருத்து இந்துக்கள் மத உணர்வை புண்படுத்தும் வகையில் உள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு வருகிற 23-ந்தேதி விசாரணைக்கு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. ராவணன் பற்றி சர்ச்சை கருத்து மன்னிப்பு கேட்ட சயீப் அலிகான்
பாகுபலியில் பிரபலமான பிரபாஸ் அடுத்து ராமாயணத்தை மையமாக வைத்து தயாராகும் ஆதிபுருஷ் படத்தில் நடிக்கிறார்.