சினிமா செய்திகள்

நடிகை ராஷ்மிகாவின் ஆரோக்கிய ரகசியம் + "||" + Of actress Rashmika Health secret

நடிகை ராஷ்மிகாவின் ஆரோக்கிய ரகசியம்

நடிகை ராஷ்மிகாவின் ஆரோக்கிய ரகசியம்
தமிழில் கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் நடிக்கும் ராஷ்மிகா மந்தனா தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். தனது அழகு, ஆரோக்கியம் பற்றி அவர் கூறியதாவது.
தினமும் காலை எழுந்ததும் ஒரு லிட்டர் தண்ணீரில் ஆப்பிள் சிடர் வினிகர் கலந்து குடிப்பேன். சிற்றுண்டியாக ஒரு கிண்ணம் நிறைய பலவித பழங்கள் சாப்பிடுவேன். மதியம் அவித்த எல்லா காய்கறிகளையும் சாப்பிடுவேன். இரவு சாப்பாட்டில் சாதம் இருக்காது. எளிதில் ஜீரணம் ஆகும் உணவை உண்பேன். சிக்கன் ஒரு காலத்தில் எனக்கு ரொம்ப இஷ்டம். இப்போது அதை விட்டு விட்டேன். வேகவைத்த முட்டை மட்டும் நிறைய சாப்பிடுகிறேன். ஐஸ்கிரீம், சாக்லேட் கேக் பிடிக்கும். ஆனால் உணவு கட்டுப்பாட்டுக்கு மாறிய பிறகு அவற்றை சுத்தமாக ஒதுக்கி விட்டேன். ஆரோக்கியமான உணவுகளுடன் சேர்த்து நேர்மறை எண்ணங்களும் இருக்க வேண்டும். மனது ஆனந்தமாக அமைதியாக சந்தோஷமாக இருந்தால் நாம் அழகாக தெரிவோம். இவைகள்தான் எனது அழகு, ஆரோக்கியத்தின் ரகசியங்கள். இவ்வாறு ராஷ்மிகா கூறினார்.