சினிமா செய்திகள்

சைவ உணவு ஆர்வலர்கள் சோனு சூட், ஸ்ரத்தாவுக்கு பீட்டா கவுரவ விருது + "||" + Vegetarian food enthusiasts Sonu Suite, Beta Honors Award for Sratha

சைவ உணவு ஆர்வலர்கள் சோனு சூட், ஸ்ரத்தாவுக்கு பீட்டா கவுரவ விருது

சைவ உணவு ஆர்வலர்கள் சோனு சூட், ஸ்ரத்தாவுக்கு பீட்டா கவுரவ விருது
பீட்டா ஆண்டுதோறும் சைவ உணவை ஊக்குவிப்பவர்களை தேர்வு செய்து விருது வழங்கியும் கவுரவிக்கிறது.
விலங்குகள் நல பாதுகாப்பு அமைப்பான பீட்டா சைவ உணவு விழிப்புணர்வு பிரசாரங்களில் ஈடுபட்டு வருகிறது. ஆண்டுதோறும் சைவ உணவை ஊக்குவிப்பவர்களை தேர்வு செய்து விருது வழங்கியும் கவுரவிக்கிறது. ஏற்கனவே பிரதமர் நரேந்திரமோடி, நடிகர் அமிதாப்பச்சன், கங்கனா ரணாவத், அனுஷ்கா சர்மா ஆகியோர் பீட்டா விருது பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் 2020-ம் ஆண்டின் சிறந்த சைவ உணவு ஆர்வலர்களாக நடிகர் சோனு சூட், நடிகை ஸ்ரத்தா கபூர் ஆகியோரை பீட்டா அமைப்பு அறிவித்து உள்ளது. தமிழ், இந்தி, தெலுங்கு படங்களில் நடித்துள்ள சோனு சூட் கொரோனா காலத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவிகள் செய்து இந்தியா முழுவதும் கவனம் பெற்றார். ஸ்ரத்தா கபூர் தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியான சாஹோ படத்தில் பிரபாஸ் ஜோடியாக நடித்து இருந்தார். சோனுசூட்டும் ஸ்ரத்தா கபூரும் சைவ உணவு மற்றும் விலங்குகள் பாதுகாப்பை வலியுறுத்தி வருவதற்காக இந்த ஆண்டுக்கான பீட்டாவின் சைவ பிரியர்கள் விருதுக்கு தேர்வாகி உள்ளனர்.