சினிமா செய்திகள்

தணிக்கை முடிந்தது விஜய்யின் மாஸ்டர் படத்துக்கு ‘யு ஏ’ சான்று + "||" + The audit is complete For Vijay master film UA certification

தணிக்கை முடிந்தது விஜய்யின் மாஸ்டர் படத்துக்கு ‘யு ஏ’ சான்று

தணிக்கை முடிந்தது விஜய்யின் மாஸ்டர் படத்துக்கு ‘யு ஏ’ சான்று
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், மாளவிகா மோகனன் ஜோடியாக நடித்துள்ள மாஸ்டர் படம் கடந்த ஏப்ரல் மாதமே திரைக்கு வர தயாரான நிலையில் கொரோனாவால் நின்று போனது.
தற்போது தியேட்டர்களை திறந்தும் குறைந்த எண்ணிக்கையில் ஆட்களை அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கொரோனா விதிமுறைகளால் திரைக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. ஓ.டி.டி. தளத்தில் மாஸ்டர் படத்தை வெளியிட பேச்சுவார்த்தைகள் நடந்ததாக படக்குழுவினர் தெரிவித்தனர். ஆனால் தியேட்டர் அதிபர்கள் வற்புறுத்தலால் ஓ.டி.டி. முடிவை கைவிட்டு பொங்கலுக்கு தியேட்டர்களில் திரையிட தயாராவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மாஸ்டர் படத்தை தணிக்கை குழுவினர் தற்போது பார்த்து ‘யூ ஏ’ சான்றிதழ் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. படத்துக்கு யூ சான்றிதழ் கிடைக்கும் என்று படக்குழுவினர் எதிர்பார்த்தனர். ஆனால் அதிகமான சண்டை காட்சிகள் இருப்பதை காரணம் காட்டி யூ ஏ சான்றிதழ் அளித்து இருப்பதாக கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு மாஸ்டர் படம் தணிக்கை ஆனதாக வெளியான சான்றிதழ் உண்மையானது அல்ல என்று படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.