சினிமா செய்திகள்

‘அவெஞ்சர்ஸ்’ இயக்குனர்களின் திரைப்படத்தில் நடிகர் தனுஷ் - நடிகர் விவேக் பெருமிதம் + "||" + Actor Dhanush in the 'Avengers' directors' movie - Actor Vivek feels proud

‘அவெஞ்சர்ஸ்’ இயக்குனர்களின் திரைப்படத்தில் நடிகர் தனுஷ் - நடிகர் விவேக் பெருமிதம்

‘அவெஞ்சர்ஸ்’ இயக்குனர்களின் திரைப்படத்தில் நடிகர் தனுஷ் - நடிகர் விவேக் பெருமிதம்
‘அவென்ஜர்ஸ்' இயக்குனர்களின் திரைப்படத்தில் நடிக்க தனுஷ் ஒப்பந்தமாகி உள்ளது குறித்து நடிகர் விவேக் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வரும் நடிகர் தனுஷ், ஏற்கனவே இரண்டு பாலிவுட் படங்களில் நடித்து  உள்ளார். தற்போது  மூன்றாவது பாலிவுட் படமான 'அட்ரங்கி ரே' படத்தில் நடித்து வருகிறார். கென் ஸ்காட் இயக்கிய சர்வதேச திரைப்படமான 'தி எக்ஸ்ட்ரார்டினரி ஜர்னி ஆப் தி பாகிர்' படத்திலும் அவர் நடித்துள்ளார், மேலும் அவரது நடிப்புக்கு விமர்சன ரீதியான பாராட்டையும் பெற்றார்.

இந்நிலையில், ‘அவென்ஜர்ஸ்: எண்ட்கேம்’ இயக்குனர்கள் ரூஸோ பிரதர்ஸ் அந்தோனி மற்றும் ஜோவின் அடுத்த படமான 'தி கிரே மேன்' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க  தனுஷ் ஒப்பந்தமாகி உள்ளார்.'தி கிரே மேன்' படத்தில் ரியான் கோஸ்லிங் (பிளேட் ரன்னர்) மற்றும் கிறிஸ் எவன்ஸ் (கேப்டன் அமெரிக்கா) ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர் மற்றும் அனா டி அர்மாஸ், ஜெசிகா ஹென்விக், வாக்னர் மவுரா, மற்றும் ஜூலியா பட்டர்ஸ் ஆகியோர் நடிக்கிறார்கள்.

இதனை தொடர்ந்து நடிகர் தனுஷிற்கு அவரது ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இது குறித்து நடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில், “இது எங்களுக்கு மிகவும் பெருமையான தருணம். இது போல் தொடர்ந்து எங்களை ஊக்கப்படுத்துங்கள் தனுஷ்” என்று பதிவிட்டுள்ளார்.