சினிமா செய்திகள்

அரசியல் கட்சியில் இணையும் சத்யராஜ் மகள்; மகளுக்கு ஆதரவாக ரஜினி-கமலுக்கு எதிராக சத்யராஜ் பிரசாரம் செய்வாரா...? + "||" + Actor sathyaraj daughter joined politics

அரசியல் கட்சியில் இணையும் சத்யராஜ் மகள்; மகளுக்கு ஆதரவாக ரஜினி-கமலுக்கு எதிராக சத்யராஜ் பிரசாரம் செய்வாரா...?

அரசியல் கட்சியில் இணையும் சத்யராஜ் மகள்; மகளுக்கு ஆதரவாக ரஜினி-கமலுக்கு எதிராக சத்யராஜ் பிரசாரம்  செய்வாரா...?
என் மகள் திவ்யாவின் அரசியல் பாதையிலும் ஒரு தகப்பனாகவும் நண்பனாகவும் பக்கபலமாக இருப்பேன் என்றும், நிச்சயமாக என் மகளுக்காக பிரச்சாரம் செய்வேன் என்றும் சத்யராஜ் அறிக்கை மூலம் தெரிவித்து இருந்தார்.
சென்னை

சினிமாவில் வில்லன், குண சித்திர நடிகர், ஹீரோ ஆகிய அடையாளங்கள் நடிகர் சத்யராஜுக்கு உண்டு. 

ஆனால் நிஜத்தில் சத்யராஜை உற்று பார்த்தவர்களுக்கு தெரியும் அவர், ஒரு சாதி - மத மறுப்பாளர், கடவுள் மறுப்பாளர், பெரியாரிய சிந்தனையாளர். பல்வேறு கூட்டங்களில் அனல் பறக்க பேசியிருக்கிறார். 

இந்த அரசியல் தெறிக்கும் பேச்சு வரும் சட்டமன்றத்தேர்தல் பிரசார களத்தில் ஓங்கி ஒலிக்கும் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. 

என் மகள் திவ்யாவின் அரசியல் பாதையிலும் ஒரு தகப்பனாகவும் நண்பனாகவும் பக்கபலமாக இருப்பேன் என்றும், நிச்சயமாக என் மகளுக்காக பிரச்சாரம் செய்வேன் என்றும் சத்யராஜ் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.  

ஊட்டச்சத்து நிபுணரான திவ்யா சத்யராஜ், கொரோனா பெருந்தொற்று பரவிய காலத்தில், ஊட்டச்சத்து மிகுந்த உணவை இலவசமாக வழங்க "மகிழ்மதி" என்ற இயக்கத்தை ஆரம்பித்தார்.

பெரியாரின் தீவிர தொண்டர்  சத்யராஜ் என்பதால் அது சார்ந்த  அரசியல் கட்சியை மகள் திவ்யா தேர்ந்து எடுப்பார் என கூறப்படுகிறது.

மகளுக்காக  சத்யராஜ் ரஜினியின் ஆன்மீக அரசியலுக்கும், கமலின் மக்கள் நீதி மய்யத்திற்கும் எதிராக பிரசாரம்  செய்வாரா என பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது.தொடர்புடைய செய்திகள்

1. அண்ணாத்த படப்பிடிப்பை முடித்து விட்டு சென்னை திரும்பிய ரஜினிகாந்த்!
நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த படப்பிடிப்பை முடித்து விட்டு ஐதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை திரும்பினார்.
2. கொரோனாவுக்கு சிகிச்சைபெற்று வந்த நடிகை பலி
கொரோனாவுக்கு சிகிச்சைபெற்று வந்த பிரபல குணசித்திர நடிகை பலியானார்.
3. மாரடைப்பால் காலமான இயக்குநர் கே.வி.ஆனந்துக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதி
கே.வி.ஆனந்துக்கு கொரோனா தொற்று இருந்ததால் பொதுமக்கள் அஞ்சலிக்கு உடல் வைக்கப்படவில்லை
4. டைரக்டர் கே.வி. ஆனந்த் மறைவிற்கு திரை உலக பிரபலங்கள் இரங்கல்!
டைரக்டர் கே.வி. ஆனந்த் மறைவிற்கு திரை உலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
5. 93 வது ஆஸ்கார் விருதுகள்...3 விருதுகளை வென்ற திரைப்படம் ; முழு விபரம்
93 வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகை என மூன்று முக்கிய விருதுகளை நோமட்லேண்ட் படம் பெற்றுள்ளது.