சினிமா செய்திகள்

கட்சி மேலிடம் கட்டளையிட்டால் தேர்தலில் போட்டியிடுவேன் நடிகை காயத்ரி ரகுராம் பேட்டி + "||" + If the party orders the above I will contest the election Interview with Actress Gayatri Raghuram

கட்சி மேலிடம் கட்டளையிட்டால் தேர்தலில் போட்டியிடுவேன் நடிகை காயத்ரி ரகுராம் பேட்டி

கட்சி மேலிடம் கட்டளையிட்டால் தேர்தலில் போட்டியிடுவேன் நடிகை காயத்ரி ரகுராம் பேட்டி
மறைந்த டான்ஸ் மாஸ்டர் ரகுராமின் மகள், காயத்ரி ரகுராம். இவரும் டான்ஸ் மாஸ்டராக பணிபுரிந்தவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 மொழிப் படங்களுக்கு நடனம் அமைத்திருக்கிறார்.
சார்லி சாப்ளின் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து, பரசுராம், விசில், வை ராஜா வை, யாதுமாகி நின்றாய் உள்பட பல படங்களில் கதாநாயகியாக நடித்தார். இப்போது அவர் நடித்துக்கொண்டே, டான்ஸ் மாஸ்டராகவும் பணிபுரிந்து வருகிறார்.

காயத்ரி ரகுராம் பா.ஜனதா கட்சியில் உறுப்பினராக இருந்து வருகிறார். வருகிற சட்டசபை தேர்தலில், பா.ஜனதாவுக்காக பிரசாரம் செய்ய முடிவு செய்து இருக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது:-

“வருகிற தேர்தலில் பா.ஜனதா கட்சியின் வெற்றிக்காக தமிழ்நாடு முழுவதும் நான் பிரசாரம் செய்வேன். இந்தத் தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றி பெறும்.

கட்சி மேலிடம் கட்டளையிட்டால் நான் தேர்தலில் போட்டியிடுவேன். வெற்றியும் பெறுவேன். சினிமாவில் பணிபுரிந்து கொண்டே அரசியலில் தொடர்ந்து ஈடுபடுவேன்”

இவ்வாறு அவர் கூறினார்.