கொரோனா அச்சுறுத்தல் தனுசின் ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பு ஒத்திவைப்பு


கொரோனா அச்சுறுத்தல் தனுசின் ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பு ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 21 Dec 2020 10:30 PM GMT (Updated: 21 Dec 2020 8:45 PM GMT)

தனுஷ் ஏற்கனவே எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆப் தி பகீர் என்ற ஆங்கில படத்தில் நடித்துள்ளார்.

தற்போது ‘தி க்ரே மேன்’ என்ற பெயரில் தயாராகும் ஹாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளனர். இதில் கேப்டன் அமெரிக்கா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான கிறிஸ் ஈவான்ஸ் மற்றும் லா லா லேண்ட், பர்ஸ்ட்மேன் ஆகிய படங்களில் நாயகனாக நடித்த ரயன் காஸ்லிங் ஆகியோரும் நடிக்கின்றனர். அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார், அவெஞ்சர்ஸ் என்ட்கேம், கேப்டன் அமெரிக்கா விண்டர் சோல்ஜர், சிவில் வார் உள்ளிட்ட படங்களை இயக்கிய அந்தோனி, ஜோ ரூஸோ ஆகியோர் டைரக்டு செய்கிறார்கள். இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததற்காக தனுஷ் மகிழ்ச்சி தெரிவித்து இருந்தார். அவருக்கு நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இதன் படப்பிடிப்பை அமெரிக்காவில் அடுத்த மாதம் தொடங்குவதாக இருந்தனர். ஆனால் கலிபோர்னியா மாகாணத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து உள்ளதால் படப்பிடிப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Next Story