சினிமா செய்திகள்

கமலின் 2 படங்கள் படப்பிடிப்பு தாமதம் + "||" + 2 pictures of Kamal Shooting delay

கமலின் 2 படங்கள் படப்பிடிப்பு தாமதம்

கமலின் 2 படங்கள் படப்பிடிப்பு தாமதம்
கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் இரண்டாம் பாகம் 2018-ல் வெளியான பிறகு சபாஷ்நாயுடு பட வேலைகள் தொடங்கி நின்று போனது.
இந்தியன்-2 படப்பிடிப்பு கொரோனா பரவலுக்கு முன்பே விபத்து காரணமாக நிறுத்தப்பட்டது. அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது. இடையில் பிக்பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்குகிறார். இந்த நிலையில் தேர்தல் பிரசாரத்தை கமல்ஹாசன் தொடங்கி இருப்பதால் இந்தியன்-2, விக்ரம் படப்பிடிப்புகளில் தாமதம் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே இந்தியன்-2 படம் கைவிடப்பட்டு விட்டதாக வெளியான தகவலை தயாரிப்பு தரப்பில் மறுத்தனர். படப்பிடிப்பை மீண்டும் தொடங்குவது குறித்து கமல்ஹாசனுடன் பேசி வருவதாக தெரிவிக்கப்பட்டது. விக்ரம் படத்துக்கு இதர நடிகர்-நடிகை தேர்வு நடக்கிறது. இரண்டு படங்களிலும் மாறி மாறி நடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில்தான் தேர்தல் பணிகளில் ஈடுபட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது. தேர்தல் அறிக்கை தயாரித்தல், வேட்பாளர் தேர்வு போன்ற பணிகளும் உள்ளன. தேர்தல் முடிந்ததும் 2 படங்களின் படப்பிடிப்பையும் முழுவேகத்தில் நடத்தி முடிக்க திட்டமிட்டு உள்ளனர்.