சினிமா செய்திகள்

கொரோனா அச்சம்: குடும்பத்தினருக்காக ஓட்டலில் தங்கிய நடிகர் + "||" + Corona Fear: The actor who stayed in the hotel for the family

கொரோனா அச்சம்: குடும்பத்தினருக்காக ஓட்டலில் தங்கிய நடிகர்

கொரோனா அச்சம்: குடும்பத்தினருக்காக ஓட்டலில் தங்கிய நடிகர்
கொரோனா அச்சத்தால் குடும்பத்தினருக்காக கேஜிஎப் இரண்டாம் பாகம் படத்தில் கதாநாயகனாக நடிக்கும் யஷ் வீட்டுக்கு செல்லாமல் ஓட்டலில் தங்கினார்.
கொரோனா பரவல் தடுப்பு முன் எச்சரிக்கையோடு மீண்டும் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. அதையும் மீறி சில படப்பிடிப்புகளில் நடிகர்களுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது திரையுலகினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் தமிழ், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் தயாராகும் கேஜிஎப் இரண்டாம் பாகம் படத்தில் கதாநாயகனாக நடிக்கும் யஷ் வீட்டுக்கு செல்லாமல் ஓட்டலில் தங்கினார். 

படப்பிடிப்பை அதிரடி சண்டை காட்சிகளுடன் படமாக்கினார்கள். சண்டை கலைஞர்களுடன் யஷ் சகதியில் புரண்டும், அடித்தும் நடிக்க வேண்டி இருந்தது. கூட்டமாக நடிகர், நடிகைகள் பங்கேற்கும் காட்சிகளும் அதிகம் இருந்தன. இதனால் குடும்பத்தினர் பாதுகாப்பை கருதி நாயகன் யஷ் ஓட்டலிலேயே தங்கினார். 

கொரோனா பரிசோதனை முடிந்து தொற்று இல்லை என்பது உறுதியான பிறகே குடும்பத்தினரை சந்தித்தார். இதுபோல் மற்ற நடிகர்களையும் ஓட்டலிலேயே தங்கவைத்தார்.