சினிமா செய்திகள்

பிரபல இயக்குனர் மரணம் + "||" + Death of famous director

பிரபல இயக்குனர் மரணம்

பிரபல இயக்குனர் மரணம்
பிரபல மலையாள இயக்குனர் நரனிபுழா ஷாநவாஸ் மரணம் அடைந்தார்.
பிரபல மலையாள இயக்குனர் நரனிபுழா ஷாநவாஸ். இவர் டைரக்டு செய்த சூபியும் சுஜாதாவும் படத்தில் ஜெயசூர்யா, அதிதிராவ் ஹைதிரி, சித்திக் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். இந்த படத்தை கடந்த ஜூலை மாதம் நேரடியாக ஓ.டி.டி தளத்தில் வெளியிட்டனர். ஓ.டி.டியில் வெளியான முதல் மலையாள படம் இதுவாகும். தொடர்ந்து அடுத்த படத்தை இயக்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வந்த நிலையில் ஷாநவாசுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து கோவையில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு செயற்கை சுவாச கருவிகள் பொருத்தி தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். நேற்று கொச்சி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 37. ஷாநவாஸ் மறைவு மலையாள திரையுலகினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.