சினிமா செய்திகள்

90-வது வயதை கொண்டாடிய பழம்பெரும் டைரக்டர் + "||" + Celebrating the 90s Legendary director

90-வது வயதை கொண்டாடிய பழம்பெரும் டைரக்டர்

90-வது வயதை கொண்டாடிய பழம்பெரும் டைரக்டர்
ஜி.என்.ரங்கராஜனின் மகன் ஜி.என்.ஆர்.குமரவேலுவும் டைரக்டர் தான். (அப்பா வழியில் மகன்). ஹரிதாஸ், நினைத்தாலே இனிக்கும், யுவன் யுவதி, வாகா ஆகிய படங்களை டைரக்டு செய்தவர்.
கமல்ஹாசன் நடித்த ‘கல்யாணராமன்’, ‘கடல் மீன்கள்’, ‘மீண்டும் கோகிலா’, ‘மகராசன்’, பிரபு நடித்த ‘அடுத்தாத்து ஆல்பர்ட்’, பிரதாப்போத்தன் நடித்த ‘கரையெல்லாம் செண்பகப்பூ’ உள்பட பல படங்களை இயக்கிய பழம்பெரும் டைரக்டர் ஜி.என்.ரங்கராஜன். இவர் 16 படங்களை டைரக்டு செய்து இருக்கிறார். அவற்றில் கமல்ஹாசன் நடித்தவை 7 படங்கள். ஜி.என்.ரங்கராஜனுக்கு 90 வயது ஆகிறது. தனது 90-வது பிறந்தநாளை கடந்த 17-ந் தேதி கொண்டாடினார்.

அவருக்கு நடிகர்கள் கமல்ஹாசன், பிரபு, விஜயகுமார், டைரக்டர் எஸ்பி.முத்துராமன் ஆகியோர் பிறந்தநாள் வாழ்த்து கூறினார்கள்.

ஜி.என்.ரங்கராஜனின் மகன் ஜி.என்.ஆர்.குமரவேலுவும் டைரக்டர் தான். (அப்பா வழியில் மகன்). ஹரிதாஸ், நினைத்தாலே இனிக்கும், யுவன் யுவதி, வாகா ஆகிய படங்களை டைரக்டு செய்தவர்.

“நமது தொழில் மீதான உண்மையான நேசமே நம் உடலையும், மனதையும் உற்சாகமாக வைத்துக்கொள்ள வழி என்பதை எனக்குள் உணர்த்தியவர், எங்க அப்பாதான்” என்கிறார், டைரக்டர் ஜி.என்.ஆர்.குமரவேலன்.