சினிமா செய்திகள்

நடிகர் ரஜினிகாந்த் நலம் பெற டுவிட்டரில் கமல்ஹாசன் வாழ்த்து + "||" + Kamal Haasan congratulates actor Rajinikanth on Twitter

நடிகர் ரஜினிகாந்த் நலம் பெற டுவிட்டரில் கமல்ஹாசன் வாழ்த்து

நடிகர் ரஜினிகாந்த் நலம் பெற டுவிட்டரில் கமல்ஹாசன் வாழ்த்து
நண்பர் நலம் பெற வாழ்த்துக்கள் என மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்துக்கு கமல்ஹாசன் டுவிட்டர் வழியே வாழ்த்து பதிவிட்டு உள்ளார்.
சென்னை,

நடிகர் ரஜினிகாந்த் 'அண்ணாத்த' படப்பிடிப்பில் கலந்து கொள்ள தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்துக்கு சென்றுள்ளார்.  கடந்த சில தினங்களுக்கு முன்பு 'அண்ணாத்த' படப்பிடிப்பில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. அப்போது ரஜினிக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது.

ஆனாலும், சென்னை திரும்பாமல் ஐதராபாத்தில் ரஜினிகாந்த் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார். எப்போது ரஜினி சென்னை திரும்புவார் என்ற தகவல் எதுவுமே வெளியாகாமல் இருந்தது.

இந்நிலையில், ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் ரஜினிகாந்த  அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியானது.  இது தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 22ந்தேதி ரஜினிகாந்துக்கு பரிசோதனை செய்யப்பட்டு அவருக்கு தொற்று இல்லை என்பது தெரிய வந்தது. அன்றிலிருந்து அவர் தனிமையில் தான் இருக்கிறார். தொடர்ந்து அவரது உடல்நலனும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

அவருக்கு கொரோனா அறிகுறிகள் இல்லையென்றாலும் அவரது ரத்த அழுத்த அளவு கடுமையாக ஏறி இறங்கி வருகிறது. மேற்கொண்டு அதற்கான பரிசோதனைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது இரத்த அழுத்தம் சீராகி, அவர் மருத்துவமனையிலிருந்து வெளியேறும் வரை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை தரப்படும் என தெரிவிக்கப்பட்டது.

நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் விசாரித்தார்.  தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், சகோதரர் ரஜினிகாந்த் விரைவில் பூரணநலம் பெற பிரார்த்திக்கிறேன் என வாழ்த்து கூறியுள்ளார்.

இதேபோன்று தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரப்பாபு நாயுடு, நடிகர் பவன் கல்யாண் ஆகியோர் ரஜினிகாந்த்  நலம் பெற வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நண்பர் நலம்பெற வாழ்த்துகள் என நடிகர் ரஜினிகாந்துக்கு தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழ், மலையாள புத்தாண்டு தினம்: முதல் அமைச்சர் பழனிசாமி வாழ்த்து
தமிழ் மற்றும் மலையாள புத்தாண்டு தினங்களை முன்னிட்டு தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி தனது வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார்.
2. 10, 12ம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர்களுக்கு கேரள முதல் மந்திரி வாழ்த்து
கேரளாவில் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர்களுக்கு முதல் மந்திரி பினராயி விஜயன் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
3. தாதாசாகேப் பால்கே விருது: நடிகர் ரஜினிகாந்துக்கு, கவர்னர் வாழ்த்து
சினிமா துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தோருக்கு மத்திய அரசு வழங்கும் உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
4. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள்: தகுதி பெற்ற இந்திய டேபிள் டென்னிஸ் வீரர்களுக்கு வாழ்த்து
இந்திய டேபிள் டென்னிஸ் வீரர்கள் சத்தியன் ஞானசேகரன் உள்ளிட்டோர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.
5. தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பிறந்தநாள்; பெரியார் நினைவிடத்தில் மரியாதை
தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தனது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னையில் உள்ள பெரியார் நினைவிடத்தில் மலர்தூவியும், மலர் வளையம் வைத்தும் மரியாதை செலுத்தினார்.