சினிமா செய்திகள்

புதுப்பேட்டை 2-ம் பாகம் மீண்டும் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் + "||" + Dhanush in Puthuppettai Part 2 is back as Selvaragavan

புதுப்பேட்டை 2-ம் பாகம் மீண்டும் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ்

புதுப்பேட்டை 2-ம் பாகம் மீண்டும் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ்
புதுப்பேட்டை 2-ம் பாகத்தை எடுப்பேன் என்று செல்வராகவன் கூறியிருந்தார். இந்நிலையில் தனுஷ் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் “என்னை செதுக்கிய செல்வராகவனுடன் மீண்டும் இணைவதில் மகிழ்ச்சி. இந்த தடவையாவது அவரை கவர்வேன் என்று நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.
செல்வராகவன் இயக்கிய காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்களில் தனுஷ் நடித்துள்ளார். தற்போது மீண்டும் புதிய படத்தில் இணைகிறார்கள். ஆனந்த் எல்.ராய் இயக்கும் ‘அத்ரங்கி ரே’ இந்தி படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். இந்தப் படத்தைத் தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கும் படத்துக்கு ஒப்பந்தமாகி உள்ளார். அதை முடித்து விட்டு செல்வராகவன் இயக்கும் படத்துக்கு வருகிறார். ஹாலிவுட் படமொன்றிலும் நடிக்கிறார். செல்வராகவன் பட வேலைகள் விறுவிறுப்பாக நடக்கின்றன. செல்வராகவனுடன் பல படங்களில் பணியாற்றிய யுவன் சங்கர் ராஜா, ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா ஆகியோர் இந்த படத்திலும் இணைகிறார்கள்.

இதுகுறித்து தனுஷ் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் “என்னை செதுக்கிய செல்வராகவனுடன் மீண்டும் இணைவதில் மகிழ்ச்சி. இந்த தடவையாவது அவரை கவர்வேன் என்று நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

இந்த படம் புதுப்பேட்டை 2-ம் பாகமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே புதுப்பேட்டை 2-ம் பாகத்தை எடுப்பேன் என்று செல்வராகவன் கூறியிருந்தார்.