சினிமா செய்திகள்

2 படங்களில் வில்லனாக ஆர்யா + "||" + Arya as the villain in 2 films

2 படங்களில் வில்லனாக ஆர்யா

2 படங்களில் வில்லனாக ஆர்யா
ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கும் எனிமி படத்தில் ஆர்யா வில்லனாக நடிக்கிறார். இதுபோல் தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில் தயாராகும் புஷ்பா படத்திலும் வில்லனாக நடிக்க ஆர்யாவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
கதாநாயகர்கள் வில்லன் வேடங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர். விஜய்யின் மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக வருகிறார். முன்னணி கதாநாயகனான ஆர்யாவும் வில்லன் வேடங்களை ஏற்க தொடங்கி உள்ளார். ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கும் எனிமி படத்தில் ஆர்யா வில்லனாக நடிக்கிறார். விஷாலுக்கு இணையான முக்கியத்துவத்தோடு ஆர்யா கதாபாத்திரத்தை உருவாக்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதன் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது.

இதுபோல் தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில் தயாராகும் புஷ்பா படத்திலும் வில்லனாக நடிக்க ஆர்யாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்த படத்தில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக ராஷ்மிகா மந்தனா வருகிறார். புஷ்பா படம் செம்மர கடத்தலை மையமாக வைத்து தயாராகிறது. இதில் ஆர்யா தவிர மேலும் 2 வில்லன்கள் இருப்பதாகவும், கன்னட நடிகர் தனஞ்செயா ஒரு வில்லனாகவும், தெலுங்கு நகைச்சுவை நடிகர் சுனில் இன்னொரு வில்லனாகவும் நடிப்பதாக கூறப்படுகிறது. ஆர்யா கதாநாயகனாக நடித்துள்ள டெடி படம் திரைக்கு வர தயாராக உள்ளது. பா.ரஞ்சித் இயக்கத்தில் சார்பேட்டா பரம்பரை படத்திலும் நடிக்கிறார்.