சினிமா செய்திகள்

விஜய் சேதுபதியை வியக்க வைத்த மதன்பாப் + "||" + Madanpop who amazed Vijay Sethupathi

விஜய் சேதுபதியை வியக்க வைத்த மதன்பாப்

விஜய் சேதுபதியை வியக்க வைத்த மதன்பாப்
25 ஆண்டுகளுக்கு முன் பார்த்தது போலவே இளமையாக இருக்கிறீர்கள்” என்று மதன்பாப்பை பார்த்து விஜய் சேதுபதி வியந்தாராம்!
25 ஆண்டுகளை கடந்தும் தோற்றத்தில் எந்த மாற்றமும் இல்லாத ‘சிரிப்பு ஸ்பெஷலிஸ்ட்’, மதன்பாப். அதனால் இவருக்கு பட வாய்ப்புகள் குறையவில்லை. துக்ளக் தர்பார், ஆதிக் ரவிச்சந்திரனின் புதிய படம், விதார்த் நடிக்கும் புதிய படம், சீனிவாஸ் இயக்கத்தில் ஒரு புதிய படம் என கைவசம் பல படங்களை வைத்து இருக்கிறார்.

துக்ளக் தர்பார் படத்தில் இவருடைய நடிப்பை பார்த்துவிட்டு, “இந்தி நடிகர் அனுபம்கேர் போல் உங்கள் நடிப்பு இருக்கிறது” என்று டைரக்டர் டெல்லி பிரசாத் தீனதயாளன் பாராட்டியிருக்கிறார்.

“ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்கு முன், ‘தேவர் மகன்’ படத்தில் பார்த்தது போலவே இளமையாக இருக்கிறீர்கள்” என்று மதன்பாப்பை விஜய் சேதுபதி வியந்தாராம்!