சினிமா செய்திகள்

‘பேராசை’ படத்தில் சங்கர்- கணேசின் மகன் ஸ்ரீ கதாநாயகன் + "||" + Shankar-Ganesha's son Sri is the protagonist in the film 'Greed'

‘பேராசை’ படத்தில் சங்கர்- கணேசின் மகன் ஸ்ரீ கதாநாயகன்

‘பேராசை’ படத்தில் சங்கர்- கணேசின் மகன் ஸ்ரீ கதாநாயகன்
‘பேராசை’ படத்தில் சங்கர்- கணேசின் மகன் ஸ்ரீ கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த் நடித்த படங்கள் உள்பட பல படங்களுக்கு மேல் இசையமைத்தவர்கள் சங்கர்-கணேஷ். இதில் கணேசின் மகன் ஸ்ரீ, ‘யாரடி நீ மோகினி’ என்ற டி.வி. தொடரில் நடித்து வருகிறார். அடுத்து இவர், ‘பேராசை’ என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். கதாநாயகி, தீசிகா.

படத்தில் இன்னொரு கதாநாயகனும், கதாநாயகியும் இருக்கிறார்கள். சி.வி.ஆர்.முத்துக்குட்டி இயக்க, சக்தி அருண் கேசவன் தயாரிக்கிறார். இவர் சொல்கிறார்:-

“ஒருவன் மது போதையில் எடுக்கும் முடிவுகள் அவனுக்கு எதிராகவே திரும்பும் என்பதை கருவாக கொண்ட படம், இது. புதுமையான கதை. 40 நாட்களில் படப்பிடிப்பு முழுவதையும் நடத்தி முடிக்க திட்டமிட்டு இருக்கிறோம்.”