சினிமா செய்திகள்

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் நடிகர் ரஜினிகாந்த் + "||" + Telangana: Actor Rajinikanth discharged from Hyderabad's Apollo Hospital.

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் நடிகர் ரஜினிகாந்த்

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் நடிகர் ரஜினிகாந்த்
ஐதராபாத் அப்போலோ மருத்துவமனையில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
ஐதராபாத்,

நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘அண்ணாத்த’  படப்பிடிப்பில் பங்கேற்ற 4 பேருக்கு கொரோனா தொற்று சமீபத்தில் உறுதி செய்யப்பட்டது. ஆனால் ரஜினிகாந்துக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் அவருக்கு தொற்று இல்லை (நெகட்டிவ்) என்று தெரியவந்தது. எனினும் பாதுகாப்பு கருதி ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.


ரஜினிகாந்துக்கு தொற்று இல்லை என்றாலும் அவர் ஐதராபாத்திலேயே தன்னை தனிமைப்படுத்தி கொண்டார். அவரது மகள் ஐஸ்வர்யா தனுசும் உடன் இருந்தார். இந்த சூழலில் உயர் ரத்த அழுத்தம் காரணமாக நேற்று முன்தினம் அவர் ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ரஜினிகாந்தின் ரத்த அழுத்தத்தில் கடுமையான மாறுபாடுகள் இருப்பதாகவும், இதற்காக பரிசோதனை தேவைப்படுவதால் அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் ஆஸ்பத்திரி பின்னர் அறிக்கை வெளியிட்டது.

அவருக்கு ரத்த அழுத்த மாறுபாடு மற்றும் சோர்வை தவிர வேறு எந்த அறிகுறியும் இல்லை எனவும், நாடித்துடிப்பு உள்ளிட்ட பிற செயல்பாடுகள் அனைத்தும் சீராக இருப்பதாகவும் ஆஸ்பத்திரி நிர்வாகம் வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்தது.

ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ரஜினிகாந்தின் உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வந்தனர். தேவையான சிகிச்சைகளையும் வழங்கினர். இதனால் ரஜினிகாந்தின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகம் நேற்று காலை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ரஜினிகாந்தின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் இரவில் நன்றாக ஓய்வு எடுத்தார். நேற்று (நேற்று முன்தினம்) இருந்ததைவிட அவரது ரத்த அழுத்தம் நல்ல கட்டுப்பாட்டில் இருக்கிறது. என்றாலும் ரத்த அழுத்தம் தொடர்ந்து அதிகமாகவே இருக்கிறது.

ஆனால் அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அபாயகரமான நிலை எதுவுமில்லை என்று தெரியவந்துள்ளது. அவருக்கு இன்னும் சில பரிசோதனைகள் செய்யப்பட உள்ளன. அவர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் இருக்கிறார். அவரது ரத்த அழுத்தத்தை கருத்தில்கொண்டு, முழுமையான ஓய்வு எடுக்கும்படி அவருக்கு ஆலோசனை வழங்கப்பட்டு இருக்கிறது. அவரை சந்திக்க பார்வையாளர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது. ரஜினிகாந்துக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பரிசோதனைகள் மற்றும் ரத்த அழுத்தத்தின் அடிப்படையில் அவர் எப்போது மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று கூறப்பட்டது.

இதையடுத்து ரஜினிகாந்துக்கு ரத்த அழுத்த மாறுபாடு சீராகியுள்ளது. உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. 

இந்நிலையில் ஐதராபாத் அப்போலோ மருத்துவமனையில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.  மேலும் ஒரு வாரம் முழுஓய்வில் இருக்கவேண்டும் மற்றும் இரத்த அழுத்தத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் கொரோனா தொற்று ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். மேலும் இன்று மாலையே தனி விமானத்தில் சென்னை திரும்புகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. இசையமைப்பாளர் இளையராஜாவின் புதிய ஸ்டுடியோவை நடிகர் ரஜினிகாந்த் பார்வையிட்டார்
இளையராஜா அண்மையில் தொடங்கிய ஸ்டுடியோவுக்கு வந்த ரஜினிகாந்த்; ஸ்டுடியோவை சுற்றி பார்த்து, வியந்து கோவிலுக்குள் வந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது என பாராட்டியுள்ளார்.
2. நடிகர் ரஜினிகாந்தின் தார்மீக ஆதரவு அ.தி.மு.க.வுக்கு இருக்கும் - அமைச்சர் டி.ஜெயக்குமார் தகவல்
உடல்நிலையை கருத்தில் கொண்டு அரசியலுக்கு நடிகர் ரஜினிகாந்த் வராவிட்டாலும் அவருடைய தார்மீக ஆதரவு அ.தி.மு.க.வுக்கு என்றும் இருக்கும் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியுள்ளார்.
3. என்னை நம்பி என்னுடன் வருபவர்களை பலிகடா ஆக்க விரும்ப வில்லை; கட்சி தொடங்கவில்லை நடிகர் ரஜினிகாந்த் - பரபரப்பு அறிக்கை
கட்சி தொடங்கவில்லை ; அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன் ரஜினிகாந்த் பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.
4. நடிகர் ரஜினிகாந்த் இன்று மாலை டிஸ்சார்ஜ் - அப்பலோ மருத்துவமனை அறிக்கை
நடிகர் ரஜினிகாந்த் இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்படவுள்ளதாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
5. நடிகர் ரஜினிகாந்திடம் மு.க.அழகிரி தொலைபேசி மூலம் நலம் விசாரித்தார்
நடிகர் ரஜினிகாந்திடம் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தொலைபேசி மூலம் நலம் விசாரித்தார்