சினிமா செய்திகள்

வேலுநாச்சியார் வாழ்க்கை கதையில் நயன்தாரா? + "||" + Is Nayanthara act in Velunacharya's life story?

வேலுநாச்சியார் வாழ்க்கை கதையில் நயன்தாரா?

வேலுநாச்சியார் வாழ்க்கை கதையில் நயன்தாரா?
பாகுபலி படத்துக்கு பிறகு சரித்திர கதையம்சம் உள்ள படங்கள் அதிகம் தயாராகின்றன. மணிரத்னம் பொன்னியின் செல்வன் வரலாற்று கதையை படமாக்கி வருகிறார்.
ராமாயண காவியம் பிரபாஸ், சயீப் அலிகான் நடிப்பில் ஆதிபுருஷ் பெயரில் உருவாகிறது. இந்தியில் ராணி பத்மினியின் வாழ்க்கை தீபிகா படுகோனே நடிப்பில் பத்மாவத் பெயரில் வெளிவந்தது. ஜான்சி ராணி லட்சுமி பாய் வாழ்க்கை மணிகர்னிகா பெயரில் கங்கனா ரணாவத் நடிக்க வெளியானது. மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லால் நடிப்பில் சரித்திர படங்கள் வந்துள்ளன.

இந்த நிலையில் 17-ம் நூற்றாண்டில் சிவகங்கை பகுதியில் ஆட்சி செய்து ஆங்கிலேயருக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடிய சுதந்திர போராட்ட வீராங்கனை வேலுநாச்சியார் வாழ்க்கை சினிமா படமாக தயாராகிறது. இந்த படத்தை சுசிகணேசன் இயக்குகிறார்.

இவர் பைவ் ஸ்டார், திருட்டு பயலே, கந்தசாமி உள்ளிட்ட படங்களை டைரக்டு செய்தவர். வேலுநாச்சியார் வேடத்தில் நடிக்க நயன்தாராவிடம் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் தேதிகள் ஒதுக்குவதில் சிக்கல் இருந்தால் கீர்த்தி சுரேஷை ஒப்பந்தம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மீண்டும் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு; ரஜினி, நயன்தாரா நடித்த காட்சிகள் படமானது
கொரோனா ஊரடங்கை தளர்த்தியதும் ஐதராபாத்தில் ரஜினிகாந்தின் அண்ணாத்த படப்பிடிப்பை கடந்த டிசம்பர் மாதம் தொடங்கியபோது படக்குழுவை சேர்ந்த 4 பேர் கொரோனா தொற்றில் சிக்கியதால் படப்பிடிப்பை நிறுத்தினர்.
2. ரூ.10 கோடி சம்பளத்துக்கு மயங்காத நயன்தாரா
நயன்தாரா ஒரு படத்துக்கு ரூ.5 கோடியில் இருந்து ரூ.6 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார்.