கொரோனா அச்சம் இல்லாத மனிதர்கள்: சுருதிஹாசன் கோபம்


நடிகை சுருதிஹாசன்
x
நடிகை சுருதிஹாசன்
தினத்தந்தி 28 Dec 2020 7:30 PM GMT (Updated: 2020-12-28T23:04:11+05:30)

கொரோனா பயம் இல்லாமலும் அரசு விதிமுறைகளை கடைபிடிக்காமலும் செல்வோரை நடிகை சுருதிஹாசன் கடுமையாக சாடி உள்ளார்.

அவர் கூறியதாவது:-

ஊரடங்குக்கு பிறகு எல்லோருக்கும் சுத்தமாக கொரோனா பயம் போய் விட்டது. யாருமே கொரோனாவை தீவிரமாக எடுத்துக்கொள்ளாமல் இருக்கிறார்கள். இப்போது ஊரடங்கில் இருந்து வெளியே வந்து இருக்கிறோம். இந்த நேரத்தில் மறுபடியும் இன்னொரு ஊரடங்கை சந்திக்க யாரும் தயாராக இல்லை. எனவே எல்லோரும் கவனமாக இருங்கள். கொரோனா என்பது சாதாரணமான சளியோ இருமலோ காய்ச்சலோ வந்து போகிற மாதிரி கிடையாது. அது எவ்வளவு தீவிரமான நோய் என்பதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும். தயவு செய்து பாதுகாப்பான முன் எச்சரிக்கையோடு வெளியே வாருங்கள். ஒரு வேளை கொரோனா தொற்று இருப்பது உறுதியானால் அதை மறைக்காமல் எல்லோருக்கும் சொல்லுங்கள். இதனால் தொடர்பில் இருந்தவர்கள் எச்சரிக்கையாக இருப்பார்கள். யாருக்கும் இடையூறாக இருக்காதீர்கள். எல்லோருடைய ஒத்துழைப்பின் மூலம்தான் கொரோனாவை வெல்ல முடியும்.

இவ்வாறு சுருதிஹாசன் கூறினார்.

Next Story