சினிமா செய்திகள்

வைரலாகும் புகைப்படம் காதலருடன் புத்தாண்டு கொண்டாடிய நயன்தாரா + "||" + Photo goes viral Celebrating the New Year with Valentine Nayanthara

வைரலாகும் புகைப்படம் காதலருடன் புத்தாண்டு கொண்டாடிய நயன்தாரா

வைரலாகும் புகைப்படம் காதலருடன் புத்தாண்டு கொண்டாடிய நயன்தாரா
நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் பல மாதங்களாக காதலித்து வருகிறார்கள்.
வெளிநாடுகளுக்கும் ஜோடியாக சுற்றுகிறார்கள். கோவில்களுக்கு சென்றும் வழிபடுகிறார்கள். இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும் அடிக்கடி வெளியிடுகின்றனர். திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் வசிக்கின்றனர் என்றும், ரகசிய திருமணம் நடந்து விட்டது என்றும் அவ்வப்போது கிசுகிசுக்கள் வருகின்றன. எதையும் பொருட்படுத்தாமல் ஜோடியாக சுற்றி வருகிறார்கள்.

தற்போது இருவரும் இணைந்து படங்கள் தயாரிப்பிலும் ஈடுபட்டு உள்ளனர். ரஜினிகாந்தின் அண்ணாத்த, விக்னேஷ் சிவன் இயக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல், நெற்றிக்கண் உள்ளிட்ட சில படங்களில் நயன்தாரா நடித்து வருகிறார். இந்தநிலையில் புத்தாண்டை காதலர் விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா கொண்டாடி உள்ளார். அந்த புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். புகைப்படத்தில் நயன்தாரா நீல நிற உடையில் கவர்ச்சியாக இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி உள்ளனர். புகைப்படங்கள் வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.