சினிமா செய்திகள்

சகுந்தலை வேடத்தில் நடிக்கும் சமந்தா + "||" + In the role of Sakuntala Starring Samantha

சகுந்தலை வேடத்தில் நடிக்கும் சமந்தா

சகுந்தலை வேடத்தில் நடிக்கும் சமந்தா
சகுந்தலை புராண கதை சினிமா படமாக தயாராகிறது.
விசுவாமித்திர முனிவருக்கும், மேனகைக்கும் பிறந்த சகுந்தலையும், துஷ்யந்தனும் காதலிக்கிறார்கள்.  பின்னர் துருவாச முனிவர் சாபத்தால் அந்த காதலையே துஷ்யந்தன் மறக்கும் நிலை ஏற்படுகிறது. பல கஷ்டங்களை தாண்டி துஷ்யந்தனுடன் சகுந்தலை எப்படி இணைகிறார் என்பது கதை. படத்துக்கு சகுந்தலம் என்று பெயர் வைத்துள்ளனர். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் தயாராகும் இந்த படத்தை குணசேகர் இயக்குகிறார். இவர் ஏற்கனவே அனுஷ்கா நடித்து தமிழ், தெலுங்கில் வெளியான ருத்ரமா தேவி மற்றும் தெலுங்கில் வெற்றி பெற்ற ஒக்கடு, அர்ஜுன், சைனிகுடு உள்ளிட்ட படங்களை டைரக்டு செய்தவர். சகுந்தலை படத்தில் சகுந்தலா கதாபாத்திரத்தில் நடிக்க அனுஷ்கா, பூஜா ஹெக்டே ஆகியோர் பரிசீலிக்கப்பட்டனர். இறுதியில் சகுந்தலையாக நடிக்க சமந்தாவை தேர்வு செய்து இருப்பதாக படக்குழுவினர் அறிவித்து உள்ளனர்.

சமந்தா தற்போது விக்னேஷ் சிவன் இயக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக நடித்து வருகிறார்.