சினிமா செய்திகள்

ஜேம்ஸ் பாண்ட் பட நடிகை தான்யா ராபர்ட்ஸ் காலமானார் + "||" + Tanya Roberts, Bond Girl and That 70s Show Star, Dies at 65

ஜேம்ஸ் பாண்ட் பட நடிகை தான்யா ராபர்ட்ஸ் காலமானார்

ஜேம்ஸ் பாண்ட் பட நடிகை தான்யா ராபர்ட்ஸ் காலமானார்
ஜேம்ஸ் பாண்ட் பட நடிகை தான்யா ராபர்ட்ஸ் 65 வயதில் காலமானார்
வாஷிங்டன்

பிரபலமான ஹாலிவுட் நடிகை தான்யா ராபர்ட்ஸ் காலமானார். அவருக்கு வயது 65. முதலில் மாடலாக தனது வாழ்க்கையை தொடங்கிய தான்யா, 'ஃபோர்ஸ்ட் என்ட்ரி' என்கிற திகில் படத்தின் மூலம் 1975ஆம் ஆண்டு ஹாலிவுட்டில்  நுழைந்தார்.   80களில் அமெரிக்காவில் பிரபலமான 'சார்லீஸ் ஏஞ்சல்ஸ்' என்கிற தொடரின் 5-வது சீசனில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார். 

'எ வியூ டு எ கில்' என்கிற ஜேம்ஸ் பாண்ட் படம் மூலம் அதிக பிரபலமானார். இந்தப் படம்  ராஜர் மூர், ஜேம்ஸ் பாண்டாக நடித்த கடைசிப் படமாகும். 

65 வயதான தான்யா, கிறிஸ்துமசுக்கு முன்தினம் தனது செல்ல நாயை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் சென்றார். வீடு திரும்பும்போது மயங்கிக் கீழே விழுந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு செயற்கை சுவாச உதவி பொருத்தப்பட்டது. அவர் உடல்நிலை சீராகவே இல்லை. ஞாயிற்றுக்கிழமை அன்று அவர் காலமானதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

இதற்கு முன் தான்யாவுக்கு உடல்நலப் பிரச்சினை எதுவும் இருந்ததில்லை என்று கூறப்படுகிறது. மேலும், அவர் இறப்புக்கான காரணம் மர்மமாக உள்ளது இன்னும் காரணம் அறிவிக்கப்படவில்லை.


தொடர்புடைய செய்திகள்

1. ஜேம்ஸ் பாண்ட் பட நடிகை மரணம்
ஜேம்ஸ் பாண்ட் பட நடிகை மார்க்ரெட் நோலன் காலமானார்.