சினிமா செய்திகள்

விஜய் சேதுபதி படம் ஓ.டி.டி.யில் ரிலீஸ் + "||" + Vijay Sethupathi movie released on OTT

விஜய் சேதுபதி படம் ஓ.டி.டி.யில் ரிலீஸ்

விஜய் சேதுபதி படம் ஓ.டி.டி.யில் ரிலீஸ்
விஜய் சேதுபதி படம் ஓ.டி.டி.யில் ரிலீசாக உள்ளது.

கொரோனாவால் தமிழ், தெலுங்கு, இந்தியில் தயாரான பல படங்கள் தியேட்டருக்கு பதிலாக ஓ.டி.டி.யில் வெளியாகி வருகின்றன. சூர்யாவின் சூரரை போற்று, ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேசின் பெண்குயின், வரலட்சுமி சரத்குமாரின் டேனி, விஜய்சேதுபதி நடித்துள்ள க.பெ.ரணசிங்கம், அனுஷ்காவின் நிசப்தம் உள்ளிட்ட படங்கள் நேரடியாக ஓ.டி.டி. தளத்தில் ரிலீஸ் செய்யப்பட்டன.

மாதவனின் மாறா, ஜெயம் ரவியின் பூமி படங்களும் ஓ.டி.டி.யில் வெளியாக உள்ளன. மலையாளத்தில் மோகன்லால்-மீனா ஜோடியாக நடித்துள்ள திரிஷ்யம் 2-ம் பாகம் படமும் ஓ.டி.டி.யில் வருகிறது.

இந்த நிலையில் விஜய்சேதுபதி நடித்துள்ள முகிழ் என்ற இன்னொரு படமும் ஓ.டி.டி.யில் வெளியாகிறது. இதில் நாயகியாக ரெஜினா வருகிறார். விஜய்சேதுபதியின் மகள் ஸ்ரீஜாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை விஜய்சேதுபதியே தயாரித்துள்ளார். புதுமுக இயக்குனர் கார்த்திக் டைரக்டு செய்துள்ளார். பெற்றோர் ஒரு குழந்தையை எப்படி வளர்க்கிறார்கள். அந்த குழந்தைக்கு பிரச்சினை வரும்போது பெற்றோர் எப்படி கையாள்கிறார்கள் என்பது கதை.

தொடர்புடைய செய்திகள்

1. ‘துக்ளக் தர்பார்' படத்தை எதிர்ப்பதா? விஜய் சேதுபதி வருத்தம்
விஜய்சேதுபதி. பார்த்திபன், மஞ்சிமா மோகன், ராஷி கண்ணா ஆகியோர் நடித்துள்ள துக்ளக் தர்பார் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது.
2. பிறந்த நாள் கொண்டாட்டத்தால் உருவான சர்ச்சை: விஜய் சேதுபதி வருத்தம்
பிறந்த நாள் கேக்கினை பட்டாக் கத்தியால் விஜய் சேதுபதி வெட்டுவது போன்று புகைப்படம் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது.
3. 'மாஸ்டர்' படப்பிடிப்பின்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை டுவிட்டரில் பகிர்ந்த விஜய் சேதுபதி
'மாஸ்டர்' படப்பிடிப்பின்போது எடுத்துக்கொண்ட தனது புகைப்படங்களை நடிகர் விஜய் சேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
4. ‘கேஜிஎப்-2’ படத்தில் ரவீனா தாண்டன்
‘கேஜிஎப்-2’ படத்தில் நடிகை ரவீனா தாண்டன் நடித்து வருகிறார்.
5. ‘லாபம்’ படம் ஓ.டி.டி.யில் ரிலீசா? விஜய் சேதுபதி விளக்கம்
“லாபம் படம் நேரடியாக ஓ.டி.டி.யில் வெளியாகாது. திரையரங்குகளில்தான் வெளியிடப்படும்” என விஜய் சேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.