கொரோனா அச்சம் காரணமாக அஜித்தின் ‘வலிமை’ படப்பிடிப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அஜித்குமார் நடிக்கும் வலிமை படப்பிடிப்பு கொரோனா பரவலுக்கு முன்பே தொடங்கி ஊரடங்கினால் தடைபட்டது. சமீபத்தில் மீண்டும் ஐதராபாத்தில் படப்பிடிப்பை நடத்தினர். அப்போது சண்டை காட்சியில் அஜித்துக்கு காயம் ஏற்பட்டது. தொடர்ந்து படப்பிடிப்பில் நடித்து விட்டு அஜித்குமார் சென்னை திரும்பினார்.
தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்புக்கு படக்குழுவினர் தயாராகிறார்கள். இறுதி படப்பிடிப்பையும் சில சண்டை காட்சிகளையும் சுவிட்சர்லாந்தில் படமாக்க ஏற்கனவே இயக்குனர் வினோத் முடிவு செய்து இருந்தார். அதற்கான பயண திட்டத்தையும் உருவாக்கி வைத்து இருந்தார்கள். ஆனால் கொரோனா பரவல் அச்சம் காரணமாக அதில் மாறுதல் செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சுவிட்சர்லாந்துக்கு பதில் ராஜஸ்தான் மற்றும் புதுடெல்லியில் படப்பிடிப்பை நடத்த ஆலோசிப்பதாக கூறப்படுகிறது. வலிமை முழு படப்பிடிப்பும் அடுத்த மாதம் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அஜித்குமார் பிறந்த நாளையொட்டி படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு உள்ளனர்.