சினிமா செய்திகள்

ரூ.39 கோடிக்கு வீடு வாங்கிய ஜான்வி கபூர் + "||" + Jhanvi Kapoor buys a house for Rs 39 crore

ரூ.39 கோடிக்கு வீடு வாங்கிய ஜான்வி கபூர்

ரூ.39 கோடிக்கு வீடு வாங்கிய ஜான்வி கபூர்
நடிகை ஜான்வி கபூர் ரூ.39 கோடிக்கு வீடு வாங்கி உள்ளார்.

தமிழ் திரையுலகில் கொடிகட்டி பறந்து இந்தியிலும் கலக்கிய நடிகை ஸ்ரீதேவி கடந்த 2018-ல் துபாயில் திருமண நிகழ்ச்சிக்கு சென்றபோது மரணம் அடைந்தார். இவரது கணவர் போனிகபூர் பிரபல தயாரிப்பாளராக இருக்கிறார். இவர்களுக்கு ஜான்வி கபூர், குஷி என்று இரண்டு மகள்கள் உள்ளனர். ஜான்வி இந்தியில் தடக் படத்தில் அறிமுகமானார். சமீபத்தில் ஜான்வி கபூர் நடிப்பில் வெளியான குஞ்சன் சக்சேனா படத்துக்கு வரவேற்பு கிடைத்தது. தற்போது தோஸ்தானா 2, ரூஹி அப்ஸானா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் மும்பை ஜூகு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஜான்வி கபூர் ரூ.39 கோடிக்கு புதிதாக வீடு வாங்கி இருக்கிறார். 3 தளங்கள் கொண்ட வீடாக இது அமைந்துள்ளது. இதற்கான பத்திரப்பதிவு தொகை ரூ.75 லட்சம் ஆகும். நடிகர் ஹிருத்திக் ரோஷன், நடிகை அலியாபட் ஆகியோரும் சமீபத்தில் மும்பையில் வீடு வாங்கினர். ஊர்மிளா ரூ.3 கோடியே 75 லட்சத்துக்கு அலுவலகம் வாங்கினார்.
Related Tags :