சினிமா செய்திகள்

பிரபல கன்னட நடிகர் கொரோனாவுக்கு பலி + "||" + Famous Kannada actor kills Corona

பிரபல கன்னட நடிகர் கொரோனாவுக்கு பலி

பிரபல கன்னட நடிகர் கொரோனாவுக்கு பலி
பிரபல கன்னட நடிகர் மகாதேவப்பா கொரோனாவுக்கு பலியானார்.
பிரபல கன்னட நடிகர் மகாதேவப்பா. இவர் ஆரம்பத்தில் நாடகங்களில் நடித்து பின்னர் சினிமாவுக்கு வந்தார். கன்னடத்தில் 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மகாதேவப்பா நடித்த சங்கர் குரு, கவிரத்னா காளிதாசா, குரு பிரம்மா ஆகிய படங்கள் பெரிய வெற்றி பெற்றன. கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாருடன் இணைந்து அதிக படங்களில் நடித்து இருக்கிறார்.

மகாதேவப்பாவுக்கு சில தினங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து பெங்களூருவில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் மகாதேவப்பா உடல்நிலை மோசம் அடைந்து சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 88. மகாதேவப்பாவுக்கு மனைவியும் மகனும் மகளும் உள்ளனர். அவரது மறைவுக்கு கன்னட நடிகர் நடிகைகள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
Related Tags :

தொடர்புடைய செய்திகள்

1. திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்; தனியார் நிறுவன ஊழியர் சாவு; டிரைவர் கைது
திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள்-லாரி மோதி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.
2. திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரிப்பு: கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 905 பேர் பாதிப்பு; 7 பேர் உயிரிழந்தனர்
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொடர் அதிகரிப்பால், கொரோனா தொற்றுக்கு நேற்று 905 பேர் பாதிக்கப்பட்டனர்.
3. திருவள்ளூர் நகராட்சி பகுதிகளில் கொரோனா நடமாடும் தடுப்பூசி சிறப்பு முகாம்; நகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு
திருவள்ளூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
4. கொரோனாவில் இருந்து தப்பிக்க பூஜா ஹெக்டே யோசனை
தமிழில் முகமூடி படத்தில் அறிமுகமான பூஜா ஹெக்டே, தற்போது விஜய் ஜோடியாக புதிய படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் பூஜா ஹெக்டேவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்.
5. பிரபல இந்தி நடிகர் ரன்தீர் கபூருக்கு கொரோனா
கொரோனா 2-வது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். ஆயிரக்கணக்கான உயிர்ப்பலிகளும் நடக்கின்றன. நடிகர், நடிகைகளும் கொரோனா தொற்றில் சிக்குகிறார்கள்.