சினிமா செய்திகள்

‘கேஜிஎப்-2’ படத்தில் ரவீனா தாண்டன் + "||" + Raveena Tandon in ‘KGF-2’ Film

‘கேஜிஎப்-2’ படத்தில் ரவீனா தாண்டன்

‘கேஜிஎப்-2’ படத்தில் ரவீனா தாண்டன்
‘கேஜிஎப்-2’ படத்தில் நடிகை ரவீனா தாண்டன் நடித்து வருகிறார்.

தமிழில் கமல்ஹாசன் ஜோடியாக ஆளவந்தான், அர்ஜூன் ஜோடியாக சாது படங்களில் நடித்தவர் ரவீனா தாண்டன். இந்தியிலும் அதிக படங்களில் நடித்துள்ளார். சமீப காலமாக அவர் படங்களில் நடிக்கவில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் தயாராகும் கேஜிஎப். படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இதில் நாயகனாக யாஷ் நடிக்கிறார். பிரசாந்த் நீல் இயக்குகிறார். ஹோம்பேல் பிலிம்ஸ் தயாரிக்கிறது.

இந்த படத்தில் நடிப்பது குறித்து ரவீனா தாண்டன் கூறும்போது “கேஜிஎப் 2 படத்தின் நாயகன் யாஷ் சிறந்த நடிகர். அவருடன் நடிப்பது மகிழ்ச்சி. இந்த படத்தை எனது ரசிகர்கள் கொண்டாடுவார்கள். கேஜிஎப். 2 படத்தில் எனது கதாபாத்திரம் மிக வித்தியாசமானது. சக்திவாய்ந்தது, சிக்கலானதும் கூட. ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்து இருக்கிறேனா என்பதை திரைப்படத்தில் பார்த்தால் தான் சுவாரஸ்யமாக இருக்கும். கேஜிஎப். முதல் பாகத்தைப் பார்த்து ஆச்சரியத்தில் மூழ்கினேன். அந்த படம் முற்றிலுமாக என்னை ஆட்கொண்டுவிட்டது” என்றார். கே.ஜி.எப். 2 படம் விரைவில் திரைக்கு வருகிறது.
Related Tags :

தொடர்புடைய செய்திகள்

1. உறுதியான விஜய்யின் 66-வது படம்
விஜய் மாஸ்டர் படத்துக்கு பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிக்கிறார். இது அவருக்கு 65-வது படம்.
2. வெங்கட் பிரபுவின் 10-வது படம்
பின்னணி பாடகராகவும் நடிகராகவும் சினிமா வாழ்க்கையை தொடங்கிய வெங்கட்பிரபு சென்னை 28 படம் மூலம் டைரக்டரானார்.
3. தனுசின் புதுப்பேட்டை படம் 2-ம் பாகம்?
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்து 2006-ல் வெளியான புதுப்பேட்டை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. கொக்கி குமார் கதாபாத்திரத்தில் வந்த தனுசுக்கு இந்த படம் பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
4. விஜய்யின் 66-வது படம்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படம் கடந்த ஜனவரியில் திரைக்கு வந்து நல்ல வசூல் பார்த்தது.
5. அஜித் குமாரின் 61-வது படம்
வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் 60-வது படமான வலிமை படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தில் உள்ளது.