சினிமா செய்திகள்

நடிகரை காதலிக்கும் ஸ்ரீதேவி மகள் + "||" + Sridevi's daughter who loves actor

நடிகரை காதலிக்கும் ஸ்ரீதேவி மகள்

நடிகரை காதலிக்கும் ஸ்ரீதேவி மகள்
ஸ்ரீதேவி மகளான ஜான்வி கபூர், நடிகர் ஒருவரை காதலித்து வருகிறார்.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் இந்தியில் தடக் படத்தில் அறிமுகமானார். சமீபத்தில் ஜான்வி கபூர் நடிப்பில் வெளியான குஞ்சன் சக்சேனா படத்துக்கு வரவேற்பு கிடைத்தது. தற்போது தோஸ்தானா 2, ரூஹி அப்ஸானா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தடக் படத்தில் நடித்தபோது அந்த படத்தின் கதாநாயகன் இஷான் கட்டாரை ஜான்வி காதலிப்பதாக கிசுகிசுக்கள் வந்தன. 

இருவரும் ஜோடியாகவும் சுற்றினார்கள். ஆனால் திடீரென்று பிரிந்து விட்டார்கள். அதன் பிறகு தோஸ்தானா 2 படத்தில் கார்த்திக் ஆர்யனுடன் ஜோடி சேர்ந்தார். ஜான்வியும், கார்த்திக் ஆர்யனும் அடிக்கடி ரகசியமாக சந்திப்பதாகவும், இருவரும் காதலிப்பதாகவும் கிசுகிசுக்கள் வந்தன. இதனை உறுதிப்படுத்துவதுபோல் கார்த்திக் ஆர்யனும், ஜான்வி கபூரும் கோவாவில் ஒரே நிறத்தில் டீசர்ட் அணிந்து ஜோடியாக சுற்றிய புகைப்படம் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகிறது. ஏற்கனவே கார்த்திக் ஆர்யன் பிரபல இந்தி நடிகர் சயீப் அலிகான் மகள் சாரா அலிகானை காதலித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :