சினிமா செய்திகள்

திருப்பாவை பாசுரம் பாடிய 8 நடிகைகள் + "||" + 8 actresses who sang the Tiruppavai Pasuram

திருப்பாவை பாசுரம் பாடிய 8 நடிகைகள்

திருப்பாவை பாசுரம் பாடிய 8 நடிகைகள்
மார்கழி திருப்பாவை பாசுரத்தை 8 நடிகைகள் பாடி உள்ளனர்.
மார்கழி மாத திருப்பாவை பாசுரத்தை நடிகைகள் சுஹாசினி, உமா பத்மநாபன், ரேவதி, நித்யா மேனன், ரம்யா நம்பீசன், அனுஹாசன், கனிகா, ஜெயஸ்ரீ ஆகிய 8 நடிகைகள் இணைந்து பாடி இருக்கிறார்கள். இந்த பாடலுக்கு நடிகை ஷோபனா நடனம் ஆடி உள்ளார். 

இதுகுறித்து சுஹாசினி கூறும்போது, “மார்கழித் திங்கள் தென்னிந்திய கலாசாரம் மற்றும் பாரம்பரியங்களை இன்றைய இளைய சமுதாயத்திற்கு மறு அறிமுகம் செய்யும் முயற்சியாக தொழில் ரீதியிலான பாடகர்கள் அல்லாத நாங்கள் 8 நடிகைகள் எங்கள் சொந்த குரலில் மார்கழித் திங்கள் என்ற திருப்பாவை முதல் பாசுரத்தை பாடியிருக்கிறோம். 

இந்த பாடலை பெரும்பாலானோர் எங்கள் செல்போனிலேயே பாடி பதிவு செய்தோம். இது அற்புதமாக தொகுக்கப்பட்டு உள்ளது. இந்த பாடல் மக்களை மகிழ்விக்கும்'' என்றார். நடிகைகள் பாடிய திருப்பாவை பாசுரத்தை நடிகர்கள் கமல்ஹாசன், மாதவன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் வெளியிட உள்ளனர்.