சினிமா செய்திகள்

அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு இருக்கும் 2 பேரை காலி செய்யும்படி நடிகர் விஜய் போலீஸ் நிலையத்தில் புகார் + "||" + Actor Vijay has lodged a complaint with the police station to vacate 2 rented accommodation

அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு இருக்கும் 2 பேரை காலி செய்யும்படி நடிகர் விஜய் போலீஸ் நிலையத்தில் புகார்

அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு இருக்கும் 2 பேரை காலி செய்யும்படி நடிகர் விஜய் போலீஸ் நிலையத்தில் புகார்
ரவிராஜா, குமார் இருவரையும் அந்த பொறுப்பில் இருந்து விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் ஆனந்து நீக்கம் செய்து அறிவித்தார். இதனால் 2 பேரையும் வீட்டை காலி செய்யும்படி நடிகர் விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பூந்தமல்லி,

நடிகர் விஜய்க்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு சென்னை சாலிகிராமத்தில் உள்ளது. இங்கு விஜய் மக்கள் இயக்கத்தில் அகில இந்திய செயலாளராக இருந்து வந்த ரவிராஜா, துணை செயலாளராக இருந்து வந்த குமார் ஆகியோர் பல வருடங்களாக வாடகைக்கு வசித்து வருகின்றனர்.

இதற்கிடையில் ரவிராஜா, குமார் இருவரையும் அந்த பொறுப்பில் இருந்து விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் ஆனந்து நீக்கம் செய்து அறிவித்தார். இதனால் 2 பேரையும் வீட்டை காலி செய்யும்படி நடிகர் விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் வீட்டை காலி செய்யவில்லை.

இதையடுத்து நடிகர் விஜய் தரப்பில் அவரது வக்கீல்கள் விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனுவை அளித்துள்ளனர். அதில், தனது அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வசித்து வரும் 2 பேரையும் காலி செய்து தரும்படி கூறி இருந்தார்.

வீட்டை காலி செய்ய அவகாசம் வேண்டும் என இருவரும் கேட்டுக்கொண்டதாக தெரிகிறது. இதுபற்றி விருகம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.