சினிமா செய்திகள்

ஜி.வி.பிரகாஷ் இசையில் தனுசின் 43-வது படம் + "||" + Dhanush's 43rd film with music by GV Prakash

ஜி.வி.பிரகாஷ் இசையில் தனுசின் 43-வது படம்

ஜி.வி.பிரகாஷ் இசையில் தனுசின் 43-வது படம்
தனுஷ் ஏற்கனவே ஜகமே தந்திரம், கர்ணன் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். தொடர்ந்து இந்தியில் அந்த்ரங்கி ரே படத்தில் நடித்தார்.
இதன் படப்பிடிப்பும் முடிந்துள்ளது. இந்த மூன்று படங்களும் அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன. அடுத்து கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் நடிக்க இருப்பதாகவும், இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க உள்ளார் என்றும் ஏற்கனவே தகவல் வெளியானது. இது தனுசுக்கு 43-வது படம். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி இருப்பதாக ஜி.வி.பிரகாஷ் தெரிவித்து உள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “தனுசின் 43-வது படத்தின் அறிமுக பாடல் காட்சி நேற்று படமாக்கப்பட்டது. பாடலாசிரியர் விவேக் எழுதிய இந்த பாடலை தனுஷ் பாடி இருக்கிறார். இந்த பாடல் ஸ்டைலான மாஸாக உருவாகி உள்ளது'' என்று குறிப்பிட்டு உள்ளார்.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். சமுத்திரக்கனியும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். இதில் பாடலாசிரியர் விவேக் கூடுதலாக திரைக்கதை மற்றும் வசனம் எழுதும் பணியிலும் இணைந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ‘அண்ணாத்த’ படத்தை அடுத்து தனுஷ் இயக்கத்தில், ரஜினிகாந்த்
ரஜினிகாந்த் நடித்து வரும் ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்தபோது, அவருடைய உடல்நிலை திடீரென்று பாதிக்கப்பட்டது.
2. சிறந்த நடிகருக்கான தேசிய விருதுக்கு தனுஷ் தேர்வு- சிறந்த துணை நடிகர் பிரிவில் விஜய் சேதுபதி தேர்வு
சூப்பர் டீலக்ஸ் படத்திற்காக நடிகர் விஜய் சேதுபதிக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
3. பாடல் வரிகளால் சர்ச்சை; தனுஷ் பட டைரக்டருக்கு மிரட்டல்
‘கலைப்புலி’ எஸ்.தாணு என்றாலே ‘பிரமாண்டம்’ தான் நினைவுக்கு வரும். இவரும், தேசிய விருது பெற்ற நாயகன் தனுசும் ‘கர்ணன்’ படத்தில் இணைந்து பணிபுரிகிறார்கள்.
4. ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பில் தனுஷ்
தனுஷ், ‘தி க்ரே மேன்’ என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார்.
5. கோபத்தில் தனுஷ்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் படத்தை ஓ.டி.டி.யில் வெளியிட முயற்சிகள் நடந்ததை தனுஷ் எதிர்த்தார்.