சினிமா செய்திகள்

‘சூது கவ்வும்' 2-ம் பாகத்தில் சத்யராஜ் + "||" + Sathyaraj in the 2nd part of ‘Soodu Kavum’

‘சூது கவ்வும்' 2-ம் பாகத்தில் சத்யராஜ்

‘சூது கவ்வும்' 2-ம் பாகத்தில் சத்யராஜ்
தமிழில் எந்திரன், பில்லா, சாமி, வேலை இல்லா பட்டதாரி, அரண்மனை, சண்டக்கோழி உள்ளிட்ட படங்களின் இரண்டாம் பாகங்கள் வந்துள்ளன.
சிங்கம், காஞ்சனா படங்கள் 3 பாகங்களாக வந்தன. அரண்மனை படத்தின் மூன்றாம் பாகமும் தயாராகிறது. விஷ்ணு விஷாலின் நேற்று இன்று நாளை மற்றும் விஜய்சேதுபதியின் பீட்சா படங்களின் இரண்டாம் பாகங்களும் தயாராக உள்ளன.

இந்த நிலையில் சூது கவ்வும் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சிகள் நடக்கின்றன. 2013-ல் வெளியான சூது கவ்வும் விஜய்சேதுபதிக்கு திருப்பு முனை படமாக அமைந்தது. பாபி சிம்ஹா, அசோக் செல்வன், ராதாரவி, ரமேஷ் திலக், கருணாகரன், சஞ்சனா ஷெட்டி ஆகியோரும் நடித்து இருந்தனர். இந்த படத்தின் இரண்டாம் பாகத்துக்கான திரைக்கதையை தயார் செய்து நடிகர், நடிகை தேர்வை தொடங்கி உள்ளனர். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கருணாகரன், காளி வெங்கட் ஆகியோரும் நடிக்கின்றனர். சூது கவ்வும் 2 படத்தை எம்.எஸ்.அர்ஜுன் இயக்குவதாக கூறப்படுகிறது.