ஓட்டல் நடத்துவதில் விதி மீறினேனா? நடிகர் சோனு சூட் விளக்கம்


ஓட்டல் நடத்துவதில் விதி மீறினேனா? நடிகர் சோனு சூட் விளக்கம்
x
தினத்தந்தி 9 Jan 2021 9:45 PM GMT (Updated: 9 Jan 2021 8:04 PM GMT)

சோனுசூட் கொரோனா காலத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவிகள் செய்து இந்தியா முழுவதும் கவனம் பெற்றார்.

தமிழில் கள்ளழகர், கோவில்பட்டி வீரலட்சுமி, சந்திரமுகி, ஒஸ்தி படங்களில் வில்லனாக நடித்துள்ள சோனுசூட் கொரோனா காலத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவிகள் செய்து இந்தியா முழுவதும் கவனம் பெற்றார். அவரை கவுரவித்து தெலுங்கானாவில் சிலை வைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் சோனுசூட்டுக்கு எதிராக போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. சோனுசூட்டுக்கு சொந்தமாக மும்பை ஜுகு பகுதியில் 6 மாடி கட்டிடம் உள்ளது. அந்த கட்டிடத்தை சோனு சூட் அனுமதி இல்லாமல் ஓட்டலாக மாற்றி விட்டதாக மும்பை மாநகராட்சி அதிகாரிகள் குற்றம் சாட்டினர். போலீசிலும் புகார் அளித்துள்ளனர்.

இதுகுறித்து சோனு சூட் கூறும்போது, “முறையான அனுமதி பெற்றுத்தான் ஓட்டல் நடத்தப்படுகிறது. இதற்கான அனுமதியை மும்பை மாநகராட்சியிடம் பெற்று இருக்கிறேன். மும்பை கடற்கரை ஆணையத்தில் ஒப்புதல் பெற விண்ணப்பித்து இருக்கிறேன். கொரோனாவால் அனுமதி இன்னும் கிடைக்கவில்லை. எந்த முறைகேடும் செய்யவில்லை. நான் சட்டத்தை மதிப்பவன். அனுமதி கிடைக்காவிட்டால் மீண்டும் குடியிருப்பு பகுதியாக மாற்றி விடுவேன். மும்பை மாநகராட்சியின் நடவடிக்கையை எதிர்த்து கோர்ட்டில் அப்பீல் செய்வேன்'' என்றார்.

Next Story