‘மாஸ்டர்' படம் விஜய் ரசிகர்களை திருப்திப்படுத்தும் -டைரக்டர் லோகேஷ் கனகராஜ்


‘மாஸ்டர் படம் விஜய் ரசிகர்களை திருப்திப்படுத்தும் -டைரக்டர் லோகேஷ் கனகராஜ்
x
தினத்தந்தி 9 Jan 2021 10:15 PM GMT (Updated: 9 Jan 2021 8:08 PM GMT)

மாநகரம் படத்தை தொடர்ந்து கைதி படத்தை இயக்கி கவனம் பெற்ற இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய்யின் மாஸ்டர் படத்தை டைரக்டு செய்துள்ளார்.

மாநகரம் படத்தை தொடர்ந்து கைதி படத்தை இயக்கி கவனம் பெற்ற இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய்யின் மாஸ்டர் படத்தை டைரக்டு செய்துள்ளார். இந்த படம் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. படம் குறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

‘கைதி படத்தின் படப்பிடிப்பின்போது விஜய்க்கு மாஸ்டர் கதையை சொன்னேன். அவருக்கு பிடித்தது. படப்பிடிப்பை வேகமாக முடித்து ஏப்ரலில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டோம். கொரோனாவால் தாமதமாகி பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. விஜய்யுடன் பணியாற்றியது மகிழ்ச்சியான அனுபவம். கதை சென்னை, நாகர்கோவில், காரைக்குடி ஆகிய ஊர்களை மையமாக வைத்து நடக்கிறது. பாதி விஜய் படமாகவும், பாதி எனது படமாகவும் இருக்கும். விஜய் ரசிகர்களை மாஸ்டர் படம் திருப்திப்படுத்தும்.

விஜய்க்கு இணையான வேடத்தில் விஜய் சேதுபதி மோசமான வில்லனாக நடித்து இருக்கிறார். அந்த கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பாரா என்று விஜய்க்கு சந்தேகம் இருந்தது. அவர் சம்மதித்ததில் மகிழ்ச்சி. படத்தில் இருவரும் சந்திக்கிற காட்சிகள் பிரமாதமாக இருக்கும். படம் 3 மணிநேரம் ஓடும். படத்தில் அரசியல் இல்லை. நகைச்சுவை படம் எடுக்க ஆர்வம் உள்ளது. ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை இயக்கவும் ஆசை உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story