சினிமா செய்திகள்

'மாஸ்டர்' படப்பிடிப்பின்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை டுவிட்டரில் பகிர்ந்த விஜய் சேதுபதி + "||" + Vijay Sethupathi shared the photos on Twitter

'மாஸ்டர்' படப்பிடிப்பின்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை டுவிட்டரில் பகிர்ந்த விஜய் சேதுபதி

'மாஸ்டர்' படப்பிடிப்பின்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை டுவிட்டரில் பகிர்ந்த விஜய் சேதுபதி
'மாஸ்டர்' படப்பிடிப்பின்போது எடுத்துக்கொண்ட தனது புகைப்படங்களை நடிகர் விஜய் சேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சென்னை,

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். இதில் நடிகர் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாக இருந்த நிலையில் கொரோனாவால் தள்ளிப்போனது. தற்போது துவண்டு கிடக்கும் திரையுலகையும், ரசிகர்களுக்கும் புத்துயிர் கொடுக்கும் படி மாஸ்டர் படம் வரும் 14 ஆம் தேதி பொங்கல் பண்டிகையையொட்டி வெளிவர உள்ளது.

இதனிடையே  மாஸ்டர் படக்குழு திரைப்படம் வெற்றிபெற வேண்டி திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு சென்றுள்ளனர். இந்த பயணத்தில் இசையமைப்பாளர் அனிருத், இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், இயக்குநர் ரத்னா, விஜயின் மேலாளர் ஜெகதீஷ், நடிகர் அர்ஜூன் தாஸ் உள்ளிட்டோர் சென்றுள்ளனர். இதற்கான புகைப்படங்களை இசையமைப்பாளர் அனிருத் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் 'மாஸ்டர்' படப்பிடிப்பின்போது எடுத்துக்கொண்ட தனது புகைப்படங்களை நடிகர் விஜய் சேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. திருமணமான 8 மாதங்களில் கடன் தொல்லையால் புரோட்டா மாஸ்டர் தற்கொலை
திருவேற்காட்டில் திருமணமான 8 மாதங்களில் கடன் தொல்லையால் மனமுடைந்து புரோட்டா மாஸ்டர் தற்கொலை செய்தார்.
2. ‘துக்ளக் தர்பார்' படத்தை எதிர்ப்பதா? விஜய் சேதுபதி வருத்தம்
விஜய்சேதுபதி. பார்த்திபன், மஞ்சிமா மோகன், ராஷி கண்ணா ஆகியோர் நடித்துள்ள துக்ளக் தர்பார் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது.
3. பிறந்த நாள் கொண்டாட்டத்தால் உருவான சர்ச்சை: விஜய் சேதுபதி வருத்தம்
பிறந்த நாள் கேக்கினை பட்டாக் கத்தியால் விஜய் சேதுபதி வெட்டுவது போன்று புகைப்படம் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது.
4. விஜய் சேதுபதி படம் ஓ.டி.டி.யில் ரிலீஸ்
விஜய் சேதுபதி படம் ஓ.டி.டி.யில் ரிலீசாக உள்ளது.
5. 'மாஸ்டர்' திரைப்படத்திற்கான சிறப்பு எமோஜியை வெளியிட்டு நடிகர் விஜய் டுவீட்
'மாஸ்டர்' திரைப்படத்திற்கான சிறப்பு எமோஜியை வெளியிட்டு நடிகர் விஜய் டுவீட் செய்துள்ளார்.