சினிமா செய்திகள்

‘அண்ணாத்த' படப்பிடிப்பு: ரஜினிகாந்த் புதிய முடிவு + "||" + ‘Annatha’ shooting: Rajinikanth new result

‘அண்ணாத்த' படப்பிடிப்பு: ரஜினிகாந்த் புதிய முடிவு

‘அண்ணாத்த' படப்பிடிப்பு: ரஜினிகாந்த் புதிய முடிவு
சட்டசபை தேர்தல் முடிந்த பிறகே படப்பிடிப்பில் கலந்து கொள்ள ரஜினிகாந்த் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது

ரஜினிகாந்த் பங்கேற்ற அண்ணாத்த படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் திரைப்பட நகரில் நடந்தபோது 4 பேர் கொரோனா தொற்றில் சிக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் படப்பிடிப்பை நிறுத்தினர். ரஜினிகாந்துக்கு கொரோனா தொற்று இல்லை என்றாலும் சில நாட்கள் தனிமைப்படுத்தி ஐதராபாத்திலேயே தங்கி இருந்தார். பின்னர் ரத்த அழுத்த பிரச்சினை காரணமாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று சென்னை திரும்பினார். 

படப்பிடிப்புக்காக உடல்நிலையை கருதி ரஜினிகாந்த் மீண்டும் ஐதராபாத் செல்வது சிரமம் என்று கருதிய படக்குழுவினர் சென்னையிலேயே படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு உள்ளனர். அடுத்த மாதம் (பிப்ரவரி) சென்னையில் படப்பிடிப்பை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன. ஆனால் தமிழக சட்டசபை தேர்தல் முடிந்த பிறகே படப்பிடிப்பில் கலந்து கொள்ள ரஜினிகாந்த் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையடுத்து ஜூன் அல்லது ஜூலை மாதத்துக்கு படப்பிடிப்பை தள்ளி வைத்து இருப்பதாக கூறப்படுகிறது. அதற்குள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கிறார்கள். சிவா இயக்கும் இந்த படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். பிரகாஷ்ராஜ், சூரி, சதீஷ் ஆகியோரும் படத்தில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழக சட்ட சபை தேர்தல்: நடிகர்கள் ரஜினிகாந்த், அஜித் உள்ளிட்டோர் வாக்களித்தனர்
தமிழக சட்ட சபை தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
2. ரஜினிகாந்திற்கு தாதா சாகேப் பால்கே விருது குவியும் வாழ்த்துக்கள்
ரஜினிகாந்திற்கு தாதா சாகேப் பால்கே விருது குவியும் வாழ்த்துக்கள்; அரசியல் தலைவர்கள், திரையுலகினர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்
3. விமர்சனம் செய்ததற்கு வருந்துகிறேன்; ரஜினிகாந்த் இனி எப்போதும் எங்களின் புகழ்ச்சிக்குரியவர் -சீமான்
நடிகர் ரஜினிகாந்தை கடும் சொற்களை பயன்படுத்தி விமர்சனம் செய்ததற்காக வருந்துகிறேன். இனி எப்போதும் எங்களின் புகழ்ச்சிக்குரியவர் ரஜினிகாந்த் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
4. நண்பர் என்ற முறையில் ரஜினியிடம் ஆதரவு கேட்பேன் - கமல்
நண்பர் என்ற முறையில் ரஜினிகாந்திடம் ஆதரவு கேட்பேன் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
5. கட்சி தொடங்க உள்ள நிலையில், ரஜினிகாந்த் கூறிய வாசகங்கள் இடம்பெற்ற டி-சர்ட்டுகள்; திருப்பூரில் தயாரிப்பு மும்முரம்
நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்க உள்ள நிலையில் அவர் கூறிய வாசகங்கள் இடம் பெற்ற டி-சர்ட்டுகள் தயாரிக்கப்பட்டு தயாரிப்பு திருப்பூரில் மும்முரம்மாக நடந்து வருகிறது.