இன்னும் ஒரு நாள் காத்திருங்கள் என்று மாஸ்டர் படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் டுவீட் செய்துள்ளார்.
சென்னை,
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். இதில் நடிகர் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாக இருந்த நிலையில் கொரோனாவால் தள்ளிப்போனது. தற்போது துவண்டு கிடக்கும் திரையுலகையும், ரசிகர்களுக்கும் புத்துயிர் கொடுக்கும் படி மாஸ்டர் படம் வரும் 14 ஆம் தேதி பொங்கல் பண்டிகையையொட்டி வெளிவர உள்ளது.
இந்நிலையில் படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் டுவிட்டர் பதிவில்,
மாஸ்டர் படத்தை உங்களிடம் கொண்டு வர ஒன்றரை வருடமாக போராடி இருக்கிறோம். மாஸ்டர் லீக் காட்சிகள் உங்களில் கண்ணில் பட்டால் ஷேர் செய்ய வேண்டாம். இன்னும் ஒரு நாள் காத்திருங்கள்.. அனைவருக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார்.
Dear all It's been a 1.5 year long struggle to bring Master to u. All we have is hope that you'll enjoy it in theatres. If u come across leaked clips from the movie, please don't share it 🙏🏻 Thank u all. Love u all. One more day and #Master is all yours.