சினிமா செய்திகள்

பிரபல நடிகைக்கு கொரோனா அறிகுறி + "||" + To the famous actress Corona symptom

பிரபல நடிகைக்கு கொரோனா அறிகுறி

பிரபல நடிகைக்கு கொரோனா அறிகுறி
பிரபல தெலுங்கு நடிகை அனுசுயா பரத்வாஜ்-க்கு கொரோனா அறிகுறி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பிரபல தெலுங்கு நடிகை அனுசுயா பரத்வாஜ். இவர் தெலுங்கில் அதிக படங்களில் நடித்து இருக்கிறார். சமீபத்தில் விஜய்சேதுபதியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வலைத்தளத்தில் பகிர்ந்தார். இதையடுத்து தமிழில் தயாராகும் சில்க் சுமிதா வாழ்க்கை கதையில் அவர் நடிக்க இருப்பதாக தகவல் பரவியது. அதனை அனுசுயா மறுத்தார்.

இந்த நிலையில் அனுசுயா தனக்கு கொரோனா அறிகுறிகள் உள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “எனக்கு கொரோனா அறிகுறிகள் உள்ளன. இதனால் கர்னூலில் ஒரு நிகழ்ச்சிக்காக செல்ல இருந்த எனது பயணத்தை ரத்து செய்து விட்டேன். தற்போது என்னை தனிமைப்படுத்திக்கொண்டு இருக்கிறேன். கொரோனா பரிசோதனையும் செய்து கொள்ள இருக்கிறேன். என்னை சமீபத்தில் சந்தித்தவர்கள் அனைவரும் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். கொரோனா பரிசோதனையும் செய்து கொள்ளுங்கள்'' என்று கூறியுள்ளார்.

அனுசுயா சமீபத்தில் நடிகை நிஹாரிகா உள்ளிட்ட சிலரை சந்தித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. பிரபல நடிகை 2-வது திருமணம்
தமிழில் என் சுவாச காற்றே படத்தில் நடித்தவர் தியா மிர்சா. இந்தியில் அதிக படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார்.