சினிமா செய்திகள்

தியேட்டருக்கு வரும் முன்பே இணையதளத்தில் கசிந்த ‘மாஸ்டர்' பட காட்சிகள் + "||" + ‘Master’ movie footage leaked on the website before coming to the theater

தியேட்டருக்கு வரும் முன்பே இணையதளத்தில் கசிந்த ‘மாஸ்டர்' பட காட்சிகள்

தியேட்டருக்கு வரும் முன்பே இணையதளத்தில் கசிந்த ‘மாஸ்டர்' பட காட்சிகள்
தியேட்டருக்கு வரும் முன்பே மாஸ்டர்' பட காட்சிகள் இணையதளத்தில் கசிந்தன.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் இன்று (13-ந்தேதி) திரைக்கு வருகிறது. இதில் விஜய்சேதுபதி வில்லனாகவும், மாளவிகா மோகனன் நாயகியாகவும் வருகிறார்கள். அர்ஜுன்தாஸ், சாந்தனு, ஆண்ட்ரியா, கவுரி கிஷன் ஆகியோரும் உள்ளனர்.

படத்துக்கு தியேட்டர்களில் 100 சதவீதம் இருக்கைகள் ஒதுக்கப்படும் என்று படக்குழுவினர் எதிர்பார்த்தனர். ஆனால் கோர்ட்டு உத்தரவினால் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே ஒதுக்கப்பட்டு உள்ளது. டிக்கெட் முன்பதிவு முடிந்துள்ளது. இந்த நிலையில் திரைக்கு வரும் முன்பே மாஸ்டர் படத்தில் இடம் பெற்றுள்ள சில காட்சிகள் இணைய தளத்தில் கசிந்து படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதில் காருக்குள் இருந்தபடி நாசருடன் விஜய் பேசிக்கொண்டு வரும் காட்சியும், அர்ஜுன் தாசுடன் விஜய் பேசும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. சுமார் ஒன்றரை நிமிட காட்சிகள் கசிந்துள்ளன. இந்த காட்சிகளை வெளியிட்டது யார் என்று விசாரணை நடக்கிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் “மாஸ்டர் படத்துக்காக ஒன்றரை ஆண்டுகள் உழைத்துள்ளோம். எனவே இணைய தளத்தில் வெளியான மாஸ்டர் பட காட்சிகளை பகிர வேண்டாம்'' என்று கூறியுள்ளார்.