சினிமா செய்திகள்

விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் வெளியீடு - நள்ளிரவில் திரையரங்குகளில் குவிந்த ரசிகர்கள் + "||" + Master movie release starring Vijay

விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் வெளியீடு - நள்ளிரவில் திரையரங்குகளில் குவிந்த ரசிகர்கள்

விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் வெளியீடு - நள்ளிரவில் திரையரங்குகளில் குவிந்த ரசிகர்கள்
விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் இன்று தியேட்டர்களில் வெளியான நிலையில், ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடினர்.
சென்னை,

நடிகர் விஜய்யின் 64-வது படம் ‘மாஸ்டர்’. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தை, கடந்த ஏப்ரல் மாதமே ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர். கொரோனா பரவல் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால், மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. 

இப்படத்தை ஓடிடி-யில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இருப்பினும் படத்தை தியேட்டரில் தான் வெளியிடுவோம் என படக்குழு திட்டவட்டமாக கூறியது.

இந்நிலையில், மாஸ்டர் படம் இன்று சென்னையில் உள்ள தியேட்டர்களில் வெளியாகி உள்ளது. தியேட்டரில் விசிலடித்து, ஆரவாரம் செய்து படம் பார்த்து எவ்வளவு நாளாச்சு என ஏக்கத்துடன் காத்திருந்த ரசிகர்களுக்கு, மாஸ்டர் படம் விருந்தாக அமைந்துள்ளது. 

படத்தின் முதல் காட்சி இன்று அதிகாலை 4 மணிக்கு போடப்பட்டது. அப்போது விஜய்யின் பேனருக்கு பாலாபிஷேகம் செய்தும், பட்டாசு வெடித்தும் ரசிகர்கள் ஆராவாரம் செய்தனர். 

இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகை மாளவிகா மோகனன், நடிகர்கள் சாந்தனு, தீனா, அர்ஜுன் தாஸ், இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்டோர் ரசிகர்களுடன் முதல் காட்சியை கண்டுகளித்தனர். 

திரையரங்குகளில் 50 % இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.