உற்சாக வரவேற்புடன் தமிழகம் முழுவதும் வெளியானது 'மாஸ்டர்' - விஜய் ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்


உற்சாக வரவேற்புடன் தமிழகம் முழுவதும் வெளியானது மாஸ்டர் - விஜய் ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்
x
தினத்தந்தி 13 Jan 2021 6:02 AM GMT (Updated: 13 Jan 2021 6:02 AM GMT)

ரசிகர்களின் உற்சாக வரவேற்புடன் விஜய்யின் மாஸ்டர் படம் இன்று வெளியானது.

சென்னை,

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். கொரோனாவால் ரிலீஸ் ஆகாமல் இந்த படம் பொங்கல் பண்டியையொட்டி இன்று வெளியானது.  

காலை 4 மணிக்கு சிறப்பு காட்சிகள் வெளியானதையடுத்து திரையரங்குகளில் ரசிகர்கள் பட்டாசு வெடித்து நடனமாடி உற்சாகமாக கொண்டாடினர்.

படம் திரையிடப்பட்டபோது, ரசிகர்கள் ஆரவாரத்துடன் கூச்சல் எழுப்பி, கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

 தமிழகம் முழுவதும் 800 க்கும் அதிகமான திரையரங்குகளில் மாஸ்டர் வெளியாகியுள்ளது. சென்னை கோயம்பேடு ரோகிணி திரையரங்குகளுக்கு வெளியே ரசிகர்கள் கொண்டாடுவதற்கு ஏற்ப பெரிய எல்ஈடி திரையில் விஜய்யின் பாடல்கள் ஒளிபரப்பானது. அங்கு காலை 4 மணி காட்சிக்கு படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத், படத்தின் நாயகி மாளவிகா மோகணன், நடிகர் சாந்தனு ஆகியோர் ரசிகர்களுடன் படத்தை பார்த்தனர். 

மும்பையில் உள்ள திரையரங்குகளில் மாஸ்டர் வெளியானது. படம் பார்க்க வந்த பொதுமக்களுக்கு கிருமி நாசினி கொடுத்து ரசிகர்கள் வரவேற்றனர்.

மராட்டிய மாநில வாடலாவில் உள்ள கார்னிவல் திரையரங்கில் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் இன்று திரையிடப்பட்டது. இதனையொட்டி. அவரது ரசிகர்கள் ஆடி,பாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். படம் பார்க்க வந்த மக்களுக்கு கிருமிநாசினி மற்றும் மாஸ்டர் பட காட்சிகள் அடங்கிய முககவசம், தண்ணீர் பாட்டில்களை ரசிகர்கள் வழங்கினர். 

Next Story