நடிகர் ராகவா லாரன்ஸ் டுவிட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
‘'ரஜினிகாந்த் ரசிகர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். கல்லால் அடித்த காயம் ஆறும் சொல்லால் அடித்தால் ஆறாது. என்னை சில குழுவினர் சொல்லால் அடித்து விட்டார்கள். அதை மறக்க முடியவில்லை. காலம் பதில் சொல்லும். வள்ளுவர் கோட்டத்தில் நடந்த போராட்டத்தில் பங்கேற்கும்படி என்னை வற்புறுத்தினர். தலைவர் முடிவால் உங்களுக்கு ஏற்பட்ட வேதனை எனக்கும் இருந்தது. அவர் அரசியலுக்கு வராததற்கு வேறு காரணம் சொல்லி இருந்தால் முடிவை மாற்றும்படி வற்புறுத்தி இருப்பேன். ஆனால் அவர் உடல் நிலையை காரணமாக கூறியுள்ளார். அவரை நாம் நிர்ப்பந்தித்து அதன்மூலம் உடல் நிலைக்கு ஏதேனும் ஏற்பட்டால் வாழ்நாள் முழுவதும் குற்ற உணர்ச்சியோடு இருக்க வேண்டி இருக்கும். அரசியலுக்கு வராவிட்டாலும் எப்போதும் அவர் எனக்கு குருதான். அவரது உடல் நலனுக்கும் மன அமைதிக்கும் பிரார்த்தனை செய்வதுதான் இப்போது முக்கியம்.'' இவ்வாறு லாரன்ஸ் கூறியுள்ளார்.