சினிமா செய்திகள்

விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படம் ஒரே நாளில் ரூ.26 கோடி வசூல்! + "||" + Master movie starring Vijay In one day Rs 26 crore collection

விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படம் ஒரே நாளில் ரூ.26 கோடி வசூல்!

விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படம் ஒரே நாளில் ரூ.26 கோடி வசூல்!
விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படம் பொங்கல் விருந்தாக கடந்த 13-ந்தேதி திரைக்கு வந்தது. அதில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து இருக்கிறார். கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் டைரக்டு செய்திருந்தார்.
இந்த படம், தமிழ்நாடு முழுவதும் ஒரேநாளில் (திரையிட்ட அன்று) ரூ.26 கோடி வசூல் செய்து இருக்கிறது. பொங்கல் அன்று (வியாழக்கிழமை) ரூ.15 கோடி வசூல் செய்துள்ளது. இதற்கு முந்திய விஜய் படங்களின் சாதனையை ‘மாஸ்டர்’ முறியடித்து இருக்கிறது. இத்தனைக்கும் அரசு விதித்த நிபந்தனைக்கு கட்டுப்பட்டு எல்லா தியேட்டர்களிலும் 50 சதவீத டிக்கெட்டுகள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. எல்லா விஜய் படங்களையும் போல் இந்த படமும் பல பிரச்சினைகளை சந்தித்த பின்னரே திரைக்கு வந்தது. முதலில் படத்தை தியேட்டரில் ‘ரிலீஸ்’ செய்வதா? அல்லது ‘ஓ.டி.டி.’யில் ‘ரிலீஸ்’ செய்வதா? என்ற பிரச்சினை வந்தது. பேச்சுவார்த்தைகள் மூலம் இந்த பிரச்சினை தீர்க்கப்பட்டது. படம், தியேட்டர்களில் மட்டும் திரையிடப்பட்டுள்ளது. அடுத்து, ‘மாஸ்டர்’ படம் என்னுடைய கதை என்று ஒருவர் எழுத்தாளர் சங்கத்தில் புகார் மனு கொடுத்து இருக்கிறார். மனு மீதான விசாரணை இன்னும் தொடங்கப்படவில்லை.

மேற்கண்ட பிரச்சினைகளை எல்லாம் சமாளித்து, ‘மாஸ்டர்’ படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 82 பேர் வேட்பு மனு தாக்கல்
திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 82 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
2. ரஷ்யாவில் கொரோனா தொற்றுக்கு மேலும் 491 பேர் பலி: புதிதாக 24,326 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
ரஷ்யாவில் கொரோனா தொற்றுக்கு மேலும் 491 பேர் பலியாகினர். புதிதாக 24,326 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.