பிறந்த நாள் கொண்டாட்டத்தால் உருவான சர்ச்சை: விஜய் சேதுபதி வருத்தம் + "||" + Vijay Sethupathi Apologises for Using Sword to Cut His Birthday Cake, Issues Statement
பிறந்த நாள் கொண்டாட்டத்தால் உருவான சர்ச்சை: விஜய் சேதுபதி வருத்தம்
பிறந்த நாள் கேக்கினை பட்டாக் கத்தியால் விஜய் சேதுபதி வெட்டுவது போன்று புகைப்படம் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது.
சென்னை,
நடிகர் விஜய்சேதுபதி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். ரசிகர்களும் திரையுலகினரும் விஜய் சேதுபதிக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நேரத்தில் விஜய்சேதுபதி ஒரு வாள் கொண்டு பிறந்தநாள் கேக் வெட்டுவது போன்ற ஒரு புகைப்படம் வெளியாகியிருக்கிறது. இது சர்ச்சையானது. இதற்கு முன்னர் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி கொண்டாடியவர்களை காவல்துறை கைது செய்துள்ளது. அதே போன்ற நடவடிக்கை விஜய்சேதுபதி மீதும் எடுக்கப்படுமா? இவரை பின்பற்றி ரசிகர்களும் இதே போல் கேக் வெட்ட துவங்கினால் என்ன செய்வது? என்ற கேள்விகள் சமூக வலைத்தளத்தில் எழுந்து வருகிறது.
இந்நிலையில் இதற்கு விளக்கம் அளித்து இருக்கிறார் விஜய் சேதுபதி. அதில், எனது பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ள திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றி. இதனை முன்னிட்டு 3 நாட்களுக்கு முன்பு எனது அலுவலகத்தில், பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் விவாதத்துக்கு உள்ளாகி இருக்கிறது.
அதில் பிறந்த நாள் கேக்கினை பட்டாக் கத்தியால் வெட்டியிருப்பேன். தற்போது பொன் ராம் சார் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிக்கவுள்ளேன். அந்தப் படத்தின் கதைப்படி ஒரு பட்டாக் கத்தி முக்கிய கதாபாத்திரமாக இருக்கும் ஆகையால், அந்தப் படக்குழுவினருடன் பிறந்த நாள் கொண்டாடும்போது அதே பட்டாக் கத்தியை வைத்து கேக்கினை வெட்டினேன்.
இது ஒரு தவறான முன்னுதாரணம் என்று பலரும் கருத்து தெரிவித்து விவாதமாகி உள்ளது. இனிமேல் இது போன்ற விஷயங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன். இந்தச் சம்பவம் யாருடைய மனதையாவது புண்படுத்தி இருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன். என்று கூறி இருக்கிறார்.
நடிகர் விஜய்சேதுபதியின் மகளுக்கு சமூக வலைத்தளத்தில் பாலியல் மிரட்டல் விடுத்த நபர் இலங்கையில் இருப்பது கண்டுபிடிப்பு கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.