சினிமா செய்திகள்

விக்ரம் பிரபுவுக்கு குவியும் பாராட்டுகள் + "||" + To actor Vikram Brabu Compliments

விக்ரம் பிரபுவுக்கு குவியும் பாராட்டுகள்

விக்ரம் பிரபுவுக்கு குவியும் பாராட்டுகள்
‘புலிக்கு பிறந்தது புலிதான்... படம் எதிர்பார்த்ததற்கும் மேலாக சிறப்பாக அமைந்துள்ளது.
விக்ரம் பிரபு நடித்த ‘புலிக்குத்தி பாண்டி’ படம் நேரடியாக தனியார் தொலைக்காட்சியில், பொங்கல் விருந்தாக ஒளிபரப்பப்பட்டது. படம் எதிர்பார்ப்புக்கும் மேலாக சிறப்பாக அமைந்திருந்ததாக ரசிகர்கள் பாராட்டினர்.

அதன்படி, ரசிகர்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

‘கதைக்களம் எதுவாக இருந்தாலும் துணிச்சலுடன் ஏற்று நடிக்கும் மனப்பக்குவம் நடிகர் திலகத்திடம் உண்டு. அந்த பாணியை கடைப்பிடித்து இருக்கும் விக்ரம் பிரபுவை பாராட்டுகிறோம். வாழ்த்துகிறோம்’.

‘திரையரங்குகளில் வெளியாகி இருந்தால் படம் பெரிய அளவில் வெற்றி பெற்று இருக்கும்’.

‘புலிக்கு பிறந்தது புலிதான்... படம் எதிர்பார்த்ததற்கும் மேலாக சிறப்பாக அமைந்துள்ளது. அதனால் வெற்றி மகுடம் சூட்டும்...’

இப்படியாக விக்ரம் பிரபுவுக்கு பாராட்டுகள் வந்து குவிகின்றன.